Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மணலாறில் வான் புலிகள் வீசிய ஐந்து குண்டுகளில் கட்டிடங்கள் சிலவும் ஆறு வாகனங்களும் சேதம்
[05 - May - 2008] [Font Size - A - A - A]
மணலாறு களமுனையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் வான் புலிகள் வீசிய 5 குண்டுகளில் சில கட்டிடங்களும் 6 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இதுதொடர்பாக `சண்டே ரைம்ஸ்' வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் சில முக்கிய பகுதிகள் வருமாறு;

ஊடக சுதந்திர நாளினை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதும் கொண்டாடியது. ஆனால், ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடாக இலங்கையை பல நாடுகள் தரப்படுத்தியுள்ளன. இங்கு ஊடகங்கள் மக்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் மிகவும் கடினமாகவே உள்ளது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி முகமாலையில் நடைபெற்ற சமர் தொடர்பாக படைத்தரப்புத் தெரிவித்த தகவல்களில் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தியதாகவே தெரிவித்திருந்தது. ஆனால், படை அதிகாரிகளும் படையினரும் இராணுவமே வலிந்த தாக்குதலை நடத்தியதாகவே தெரிவித்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்புகளை ஒட்டுக்கேட்ட போது அவர்களின் தளபதிகள் முன்னணி அரணில் உள்ள தமது உறுப்பினர்களை பின்வாங்கும்படி கேட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து படையினர் அவர்களின் அரண்களை கைப்பற்றிய சிறிது நேரத்தில் அவர்களின் மீது அதிகளவில் ஷெல்கள் ஏவப்பட்டன. இந்தத் தாக்குதலிலேயே அதிகளவான படையினர் பலியாகியிருந்தனர்.

100 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதும் 355 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இரத்மலானை விமான நிலையத்திலிருந்து கொழும்பு மருத்துவமனைக்கு காயமடைந்த படையினரை ஏற்றிச்செல்லும் அம்புலன்ஸ்கள் தமது சைரன் ஒலிகளை நிறுத்த வேண்டுமென்ற உத்தரவுகளும் விடுக்கப்பட்டுள்ளன.

களநிலைமைகளின் உக்கிரத்தை இந்த சைரன் ஒலிகளைக்(6ஆம் பக்கம் பார்க்க) கொண்டே வீதியோரங்களில் வசிக்கும் மக்கள் கண்டறிவதுண்டு. மக்கள் இது தொடர்பில் தமக்கிடையில் தொலைபேசியிலும் தகவல்களை பரிமாறுவதுண்டு.

முகமாலைப் பின்னடைவைத் தொடர்ந்து இராணுவம் புதிய படையணியான 61 ஆவது படையணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றது. இந்தப் படையணிக்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன . தற்போது இராணுவம் 8 தாக்குதல் டிவிசன்களைக் கொண்டுள்ளது. 51,52,53,55,56,57,58 (அதிரடிப்படை -1) 59 என்பனவே அவை.

நாட்டுக்குச் சிறந்த சேவையாற்றியதற்காக பல படை அதிகாரிகளை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கௌரவித்திருந்தார். அவர்களில் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவும் அடங்குவார். அவர்களுக்கு "விசிஸ்ர சேவா விபூசணயா" விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த வாரம் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவிக்காலத்தில் விடுதலைப் புலிகளை முறியடிக்கப் போவதாகவும் யாழ்ப்பாணம் , கொழும்பு, அநுராதபுரம் பகுதிகளிலிருந்து ஊடகங்களுக்கு யார் தகவல்களை வழங்குவது என்பதும் தனக்குத் தெரியுமெனவும் தெரிவித்திருந்தார்.

44 மில்லியன் ரூபா பெறுமதியில் தனது பாவனைக்கு வாங்கப்படவுள்ள பென்ஸ் ரக கார் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போது நான் ஒரு இராணுவத் தளபதி எனவே, நான் ஆட்டோவில் அல்லது வானில் அல்லது ரொயேட்டர் கொறெல்லர் காரில் பயணம் செய்ய முடியாது. ஏனைய தளபதிகள் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது ஊடகங்கள் அவற்றைக் கண்டு கொள்வதில்லை. என்னையே அவர்கள் உன்னிப்பாக கவனிப்பதுண்டு எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற சமர்களில் 2000 படையினர் கொல்லப்பட்டதாகவும் 4000 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

முகமாலைச் சமர் நடைபெற்ற நான்கு நாட்களில் விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் மணலாறு படை நிலைகள் மீது 5 குண்டுகளை வீசியுள்ளன. அவற்றில் 2 குண்டுகள் படையினரின் நிலைகளுக்குள் வீழ்ந்து வெடித்துள்ளன. இந்தத் தாக்குதலில் சில கட்டடங்களின் கூரைகளும் 6 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
மியன்மாரை சூறாவளி தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மணலாறு, மன்னார் மோதல்களில் 10 படையினர் பலி; 15 பேர் காயம்
கிழக்கு மாகாண பாடசாலைகள் 9 ஆம் திகதி மூடப்படும்
மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர வடமாகாண ஆளுநராக நியமனம்
அம்பாறையில் அதிகாலையில் கடும் தாக்குதல் ஐ.தே.க.வின் பிரதம அமைப்பாளர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக கொழும்பில் இன்று உயர் மட்டக்கூட்டம்
கிழக்குத் தேர்தலில் ஆயுத பாணிகளுடன் நிராயுதபாணியாக ஐ.தே.க. போட்டியிடுகிறது
மினுவாங்கொடை, இரத்மலானை சுற்றிவளைப்பில் 41 பேர் கைது
நடுக்கடலில் சிக்கித் தவித்த 5 இலங்கை மீனவர்கள் உயிர் பிழைக்க மொட்டை அடித்து நேர்த்தி செலுத்தினர்
வெற்றிலைக்கு வாக்களிக்காது விட்டால் வீட்டில் இருங்கள் யானைக்குமட்டும் ஒருபோதும் வாக்களித்துவிடாதீர்கள்
தபால் திணைக்களத்திற்கு 300 மில்லியன் ரூபா நஷ்டம் அரசுக்கு பெரும் சுமையான விவகாரம்
1,70,000 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாததால் சந்தேகம்
எஸ்.பி.யை தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. யாக்க ஐ.தே.க.வினர் முயற்சி
கடந்த இரு மாதங்களில் விடுதலைப் புலிகள் மூன்று கப்பல் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்
மணலாறில் வான் புலிகள் வீசிய ஐந்து குண்டுகளில் கட்டிடங்கள் சிலவும் ஆறு வாகனங்களும் சேதம்
மேல் மாகாண சபை அமைச்சர்கள் இருவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்பு
யாழ்ப்பாணம் தாதிமார் பயிற்சிக்கல்லூரிக்கு புதிய கல்வியாண்டில் 200 மாணவர்கள் அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
தென்மராட்சிப் பகுதியில் நான்கு இடங்களில் காலபோகச் செய்கைக்கு படைத்தரப்பு அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
வவுனியா ஆஸ்பத்திரியில் 40 லட்சம் ரூபாசெலவில் மனநோய் சிகிச்சைப் பிரிவு
யுத்தத்தின் பின்னடைவை மூடி மறைக்கவே தமிழரைக் கைதுசெய்து அரசு பழிவாங்குகிறது
மடுவை புனித பிரதேசமாக்க அரசு முயன்றால் ஹெலஉறுமய அதனை கடுமையாக எதிர்க்கும்
குளியாப்பிட்டி கொழும்பு பஸ்ஸிலிருந்து நான்கு கிலோ கஞ்சா பொலிஸாரால் மீட்பு
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு வேண்டுகோள்
அகதிகள் முகாமில் இலங்கையர் தற்கொலை
சந்திவெளி வாகன விபத்தில் இரு இராணுவத்தினர் பலி
பிரிட்டன் இளவரசர் றிச்சர்ட் இலங்கைக்கு 3 நாள் விஜயம்
மிகின் லங்காவின் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிக இடைநிறுத்தம்
புதுக்குடியிருப்பில் விமானத் தாக்குதல்
மாரவில வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து அரசு விரிக்கும் மாய வலையில் சிக்காதிருப்போம்
மதகுருமார் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
கிழக்குப் பக்கம் தலை வைத்தும் படுக்காத அமைச்சர்கள் இன்று மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வாக்கு கேட்கின்றனர்
தேர்தல் பிரசாரத்திற்கு அரச ஊடகங்களை ஐ.ம.சு.மு. துஷ்பிரயோகம் செய்வதாக கடும் குற்றச்சாட்டு
சம்மாந்துறையில் இன்று பிரசாரக் கூட்டம் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்கிறார்
தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் பல்வேறு தியாகங்களை செய்தனர்
மாகாண சபைத் தேர்தலில் அரச பிரதிநிதிகளை தெரிவு செய்தால் முரண்பாடற்ற நிர்வாகம் ஏற்படும்
உகண பிரதேச ஜே.வி.பி. ஆதரவாளர்கள் ஐ.தே.க.வில் இணைந்து கொண்டனர்
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் கிராமங்கள் கொங்கிறீட் வீதிகளை கண்டன
பாரிய வாக்கு மோசடியில் ஈடுபட அரசும் அதன் முஸ்லிம் முகவர்களும் திட்டம்
ஐ.தே.க.வுக்கு வாக்களித்தால் வட,கிழக்கு இணைவதுடன் முஸ்லிம்கள் புலிகளால் அடக்கி ஆளப்படும் நிலைவரும்
தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம்களை பலிக்கடாவாக்க ஹக்கீம் தயங்கார்
தமிழ் இனத்தின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு பிரபாகரன் பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்
வெளிநாட்டு ஊடகங்களுக்கு மட்டக்களப்பு ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் உதவி
இலங்கையில் வேலையற்றோரின் தொகை 4, 47,000 ஆக அதிகரிப்பு
கௌரவமான ஒரு சமூகமாக மலையக மக்கள் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும்
மலையகம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
ஏனைய இனங்களுக்கு சமனாக மலையக சமூகம் முன்னேற்றமடையாமைக்கு அவர்களது மக்கள் பிரதிநிதிகளே காரணம்
நவீன அணுகுமுறையினூடாக தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே பிரதான நோக்கம்
மலையக அரசியல் தலைமைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com