Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கடந்த இரு மாதங்களில் விடுதலைப் புலிகள் மூன்று கப்பல் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்
[05 - May - 2008] [Font Size - A - A - A]
வடபகுதியில் 3 கப்பல் ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கடந்த இரு மாதங்களில் தரையிறக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக `லக்பிம'வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் சில முக்கிய பகுதிகள் வருமாறு;

அண்மையில் மணலாறு பகுதியில் நடைபெற்ற தொடர்ச்சியான ஷெல் வீச்சுகள் விடுதலைப் புலிகள் புதிதாக பெரும் தொகையில் ஷெல்களைத் தருவித்துள்ளனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீர்ந்து வரும் தமது ஷெல்களின் கையிருப்பை அவர்கள் ஈடுசெய்து வருகின்றனர்.

அண்மையில் அரசின் புலனாய்வு அமைப்பு தெரிவித்த தகவல்கள் தென்னிலங்கை மக்களின் நம்பிக்கையினை சிதறடித்துள்ளது. விடுதலைப் புலிகளின் பல கப்பல்களை கடற்படையினர் அழித்ததனால் அவர்களுக்கான விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால், புலனாய்வுத்துறையின் தகவல்கள் மறுதலையானவை.

அதாவது, கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து மார்ச் வரையில் மூன்று ஆயுதக்கப்பல்களை விடுதலைப்புலிகள் தருவித்துள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 12 ஆம் திகதி விடுதலைப் புலிகள் வன்னிக்கு ஒரு ஆயுதக்கப்பலை தருவித்துள்ளதாகவும் படையினரின் புலனாய்வுத்துறை தேசிய பாதுகாப்புச் சபையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

இதனிடையே, பெப்ரவரி மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் விடுதலைப் புலிகள் 2 கப்பல்களை தருவித்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆழ்கடலில் நங்கூரமிட்டிருந்த இந்தக் கப்பல்களிலிருந்து றோலர்கள் மூலம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வடக்கு, கிழக்கு கடல் பகுதிகளான சாலை, முல்லைத்தீவு, வெற்றிலைக்கேணி பகுதிகளில் தரையிறக்கியுள்ளனர்.

இந்த அறிக்கைகள் தொடர்பான சந்தேகங்கள் அண்மையில் நடைபெற்ற சமர்களில் தெளிவாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில் விடுதலைப்புலிகள் அதிகளவில் ஷெல்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி முகமாலையில் நடைபெற்ற சமரிலும் அவர்கள் அதிகளவில் ஷெல்களை பயன்படுத்தியிருந்தனர். கடந்த வாரம் மணலாற்றிலும் கடுமையான ஷெல் வீச்சுக்களை நடத்தியிருந்தனர். கடந்த பல மாதங்களில் விடுதலைப்புலிகள் அதிகளவில் ஷெல்களைப் பயன்படுத்தவில்லை.

எனவேஅவர்களின் கையிருப்புமுடிந்து விட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அவர்கள் அதிகளவில் ஷெல்களைப் பயன்படுத்தி வருவது புதிதாக ஆயுதங்களை தருவித்துள்ளதையே காட்டுகின்றது.

கடந்த சனிக்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 40 பேர் படுகாயமடைந்திருந்தனர். பெருமளவிலான ஷெல்கள் மண்கிண்டிமலைப் பகுதியை நோக்கியே ஏவப்பட்டிருந்தன. மணலாறுப் பகுதியில் உள்ள கம்பிலிவெவ, கல்குளம திசபுரா, சங்கபுர, ரணபாபுர பகுதிகளில் 100 க்கும் அதிகமான ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து 100 க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஆண்டான்குளம், நெடுங்கேணி பகுதிகளிலிருந்தே இந்த ஷெல்கள் ஏவப்பட்டுள்ளன. முல்லைத்தீவை நோக்கிய படையினரின் முன்நகர்வுக்கு எதிரான தாக்குதல்களை விடுதலைப்புலிகளின் தளபதி கேணல் சொர்ணம் வழிநடத்தி வருகின்றார்.

இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விடுதலைப்புலிகளின் 2 வானூர்திகள் மணலாற்றில் உள்ள படை நிலைகளின் மீது 3 குண்டுகளை வீசியுள்ளன. அவற்றில் ஒரு குண்டு 22 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட் தலைமையகத்திற்கு அருகில் வீழ்ந்து வெடித்துள்ளது. இராணுவத்தின் பீரங்கி மற்றும் பல்குழல் செலுத்திகளை அழிக்கும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் வன்னிப்பகுதியின் மேல் எழுந்ததும் அவை வவுனியா வான்படை தளத்தில் உள்ள இந்திய, தயாரிப்பான இந்திரா -II 2 ஈ ராடர்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கொழும்பு உசார்படுத்தப்பட்டது.

புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட சீனத்தயாரிப்பான எப்-7எண் தாக்குதல் விமானம் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தாக்கும் நோக்கத்துடன் வானில் எழுந்தது. இந்த வானூர்தி நான்காவது தலைமுறை ஸ்மாட் குண்டுகளை கொண்டிருப்பதுடன், இரண்டு 500 கிலோ குண்டுகளையும் 300 கி.மீ.தூரவீச்சுக் கொண்ட வானிலிருந்து வானை கண்காணிக்கும் ராடர்களையும் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தத் தடவையும் வான் புலிகள் வெற்றி பெற்று விட்டனர் ஐந்தாவது தடவையும் அவர்கள் தாக்குதலின் பின்னர் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தை தாக்கிய பின்னர் அரசு தனது விமான எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தது. புதிய வான்கலங்கள் வான்படையில் இணைக்கப்பட்டதுடன், ஜே.வை - 11 ரக முப்பரிமாண ராடர்களையும் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்திருந்தது. மேலும் எம்.ஐ- 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்களின் தாக்குதல் வலிமையும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

வான் எதிர்ப்பு துப்பாக்கிகளும் சீர் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அரசின் இந்த நவீனமயப்படுத்தல்களை பரிசோதித்து பார்க்கும் நடவடிக்கையாகவே வான்புலிகளின் தாக்குதல் அமைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
மியன்மாரை சூறாவளி தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மணலாறு, மன்னார் மோதல்களில் 10 படையினர் பலி; 15 பேர் காயம்
கிழக்கு மாகாண பாடசாலைகள் 9 ஆம் திகதி மூடப்படும்
மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர வடமாகாண ஆளுநராக நியமனம்
அம்பாறையில் அதிகாலையில் கடும் தாக்குதல் ஐ.தே.க.வின் பிரதம அமைப்பாளர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக கொழும்பில் இன்று உயர் மட்டக்கூட்டம்
கிழக்குத் தேர்தலில் ஆயுத பாணிகளுடன் நிராயுதபாணியாக ஐ.தே.க. போட்டியிடுகிறது
மினுவாங்கொடை, இரத்மலானை சுற்றிவளைப்பில் 41 பேர் கைது
நடுக்கடலில் சிக்கித் தவித்த 5 இலங்கை மீனவர்கள் உயிர் பிழைக்க மொட்டை அடித்து நேர்த்தி செலுத்தினர்
வெற்றிலைக்கு வாக்களிக்காது விட்டால் வீட்டில் இருங்கள் யானைக்குமட்டும் ஒருபோதும் வாக்களித்துவிடாதீர்கள்
தபால் திணைக்களத்திற்கு 300 மில்லியன் ரூபா நஷ்டம் அரசுக்கு பெரும் சுமையான விவகாரம்
1,70,000 வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாததால் சந்தேகம்
எஸ்.பி.யை தேசியப் பட்டியல் மூலம் எம்.பி. யாக்க ஐ.தே.க.வினர் முயற்சி
கடந்த இரு மாதங்களில் விடுதலைப் புலிகள் மூன்று கப்பல் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்
மணலாறில் வான் புலிகள் வீசிய ஐந்து குண்டுகளில் கட்டிடங்கள் சிலவும் ஆறு வாகனங்களும் சேதம்
மேல் மாகாண சபை அமைச்சர்கள் இருவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பணிப்பு
யாழ்ப்பாணம் தாதிமார் பயிற்சிக்கல்லூரிக்கு புதிய கல்வியாண்டில் 200 மாணவர்கள் அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
தென்மராட்சிப் பகுதியில் நான்கு இடங்களில் காலபோகச் செய்கைக்கு படைத்தரப்பு அனுமதி
நீதிபதியின் பாதுகாவலர்களை தாக்க முற்பட்ட 7 பேருக்கு விளக்க மறியல்
வவுனியா ஆஸ்பத்திரியில் 40 லட்சம் ரூபாசெலவில் மனநோய் சிகிச்சைப் பிரிவு
யுத்தத்தின் பின்னடைவை மூடி மறைக்கவே தமிழரைக் கைதுசெய்து அரசு பழிவாங்குகிறது
மடுவை புனித பிரதேசமாக்க அரசு முயன்றால் ஹெலஉறுமய அதனை கடுமையாக எதிர்க்கும்
குளியாப்பிட்டி கொழும்பு பஸ்ஸிலிருந்து நான்கு கிலோ கஞ்சா பொலிஸாரால் மீட்பு
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு வேண்டுகோள்
அகதிகள் முகாமில் இலங்கையர் தற்கொலை
சந்திவெளி வாகன விபத்தில் இரு இராணுவத்தினர் பலி
பிரிட்டன் இளவரசர் றிச்சர்ட் இலங்கைக்கு 3 நாள் விஜயம்
மிகின் லங்காவின் விமான சேவைகள் அனைத்தும் தற்காலிக இடைநிறுத்தம்
புதுக்குடியிருப்பில் விமானத் தாக்குதல்
மாரவில வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
கிழக்கு மாகாண சபை தேர்தலை புறக்கணித்து அரசு விரிக்கும் மாய வலையில் சிக்காதிருப்போம்
மதகுருமார் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்
கிழக்குப் பக்கம் தலை வைத்தும் படுக்காத அமைச்சர்கள் இன்று மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வாக்கு கேட்கின்றனர்
தேர்தல் பிரசாரத்திற்கு அரச ஊடகங்களை ஐ.ம.சு.மு. துஷ்பிரயோகம் செய்வதாக கடும் குற்றச்சாட்டு
சம்மாந்துறையில் இன்று பிரசாரக் கூட்டம் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்கிறார்
தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் பல்வேறு தியாகங்களை செய்தனர்
மாகாண சபைத் தேர்தலில் அரச பிரதிநிதிகளை தெரிவு செய்தால் முரண்பாடற்ற நிர்வாகம் ஏற்படும்
உகண பிரதேச ஜே.வி.பி. ஆதரவாளர்கள் ஐ.தே.க.வில் இணைந்து கொண்டனர்
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் கிராமங்கள் கொங்கிறீட் வீதிகளை கண்டன
பாரிய வாக்கு மோசடியில் ஈடுபட அரசும் அதன் முஸ்லிம் முகவர்களும் திட்டம்
ஐ.தே.க.வுக்கு வாக்களித்தால் வட,கிழக்கு இணைவதுடன் முஸ்லிம்கள் புலிகளால் அடக்கி ஆளப்படும் நிலைவரும்
தனது தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம்களை பலிக்கடாவாக்க ஹக்கீம் தயங்கார்
தமிழ் இனத்தின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு பிரபாகரன் பல கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்
வெளிநாட்டு ஊடகங்களுக்கு மட்டக்களப்பு ஐக்கிய ஊடகவியலாளர் சங்கம் உதவி
இலங்கையில் வேலையற்றோரின் தொகை 4, 47,000 ஆக அதிகரிப்பு
கௌரவமான ஒரு சமூகமாக மலையக மக்கள் வாழ்வதற்கு அனைத்து உரிமைகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும்
மலையகம், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்
ஏனைய இனங்களுக்கு சமனாக மலையக சமூகம் முன்னேற்றமடையாமைக்கு அவர்களது மக்கள் பிரதிநிதிகளே காரணம்
நவீன அணுகுமுறையினூடாக தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே பிரதான நோக்கம்
மலையக அரசியல் தலைமைகளால் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com