பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்கவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்க அக்கட்சி திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் எம். பி. க்கள் தமது பதவியிலிருந்து விலகி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதால் வெற்றிடமாகியிருக்கும் மேற்படி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ்.பி. திசாநாயக்கவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
எஸ்.பி. திசாநாயக்காவை மேற்படி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு கட்சி முக்கியஸ்தர்கள் உடன்பட்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக எஸ்.பி. திசாநாயக்கவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அவரைப் பயன்படுத்தி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பயனடையவே ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் எண்ணியிருந்த போதும் அது தாமதமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.