கிழக்கு மாகாணசபையின் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதால் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படுமென மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அநேகமான பாடசாலைகள் வாக்களிப்பு நிலையங்களாக செயற் படவுள்ளதால் தேர்தல் வாக்களிப்பு ஏற்பாடுகளை இப்பாடசாலைகளில் மேற்கொள்வதற்கு வசதியாகவே இவை மூடப்படுகின்றன.
இது தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 12 ஆம் திகதி திங்கட் கிழமை இப்பாடசாலைகள் வழமைபோல இயங்கும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.