சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தலைமைப் பயங்கரவாதி ஒருவர் சிறையில் இருந்து கொண்டே கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் இவ்வாறு அவர் சில முக்கிய குண்டுத்தாக்குதல்களுடன் நெருங்கிய தொடர்புடையவர் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் பிலியந்தலையில் நிகழ்ந்த பஸ் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.