இஸ்மாயில் பி.மஆரிஃப்
* அன்றும் இன்றும் ஒரு நோக்கு
1988 ஆம் ஆண்டில் வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அன்று அம்பாறை மாவட்டத்துக்கான வாக்கெடுப்பு மிக முக்கியத்துவம் மிக்கதாக அமைந்திருந்தது முஸ்லிம் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக சந்திக்க முனைந்த முதல் தேர்தலும் அதுவேயாகும். அன்று அம்பாறை மாவட்டத்தில் புலிகளல்லாது வியாபித்திருந்த தீவிரவாதக் குழுக்கள் அட்டகாசமான முறையிலேயே முஸ்லிம்களுடன் நடந்து கொண்டமை வாக்கெடுப்பின் போது நன்றாகவே பிரதிபலித்தது ஐ.தே.க. போட்டியிட்ட போதும் முஸ்லிம் தொகுதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடியளவான வாக்குகளையும் அம்பாறைத் தொகுதியிலும் கூட சில ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தது.
இந்தியாவால் திணிக்கப்பட்ட அந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்பதை புலிகள் குறிவைப்பது போன்ற பிரேமை இருந்ததால் முஸ்லிம் வேட்பாளர்கள் மிக்க அச்சங் கொண்டதன் நிமித்தம் கொழும்பிலிருந்து 17 பேர் டம்மி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற விருப்பிலக்கங்களை அசல் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்டு அதன்பால் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அன்றைய தேர்தலில் அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதிகளான அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய தொகுதிகளில் பதிவாகியிருந்த வாக்குகள் முறையே 94068, 44,975, 44,075, 82,833 ஆகும். இதில் வெறும் 5,338 வாக்குகளை அம்பாறை தொகுதியிலிருந்து மாத்திரம் பெற்ற ஐ.தே.க. ஒரு ஆசனத்தைப் பெற்றது இதற்கு சம்மாந்துறையிலிருந்து பெற்ற 147 வாக்குகளும் கல்முனையிலிருந்து 111 வாக்குகளும், பொத்துவில் தொகுதியிலிருந்து பெற்ற 1704 வாக்குகளும் பலம் சேர்ந்தன.
மும்முனைப் போட்டியாயமைந்த அத்தேர்தலில் வலிதாக அளிக்கப்பட்ட 143,490 வாக்குகளில் முஸ்லிம் காங்கிரஸ் முறையே 40/ 28,983/ 26,441/ 34,972 வாக்குகளை தொகுதிகளான அம்பாறை, சம்மாந்துறை கல்முனை, பொத்துவில் ஆகியவற்றிலிருந்து மொத்தமாக 90,436 வாக்குகளைப் பெற்று 09 ஆசனங்களையும் அதேபோன்று முறையே 20/ 7,968/ 12,626/ 25,140 ஆகிய எண்ணிக்கையடிப்படையில் மொத்தமாக 45,754 வாக்குகளைப் பெற்று உககீஃஊ 04 ஆசனங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அதே எண்ணிக்கையான 14 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகவே தற்போதும் அம்பாறை மாவட்டக்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றமையை அறிந்துள்ளோம்.
கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டம் அம்பாறை என்பதை யாவரும் அறிவர். ஒரு குட்டிப் பொதுத் தேர்தல் அல்லது கருத்துக்கணிப்புப் போன்று அமைந்துவிட்டதாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 2004 போன்று மு.கா. தலைவர் போட்டியிடாவிடினும் முக்கிய முழு அரை அமைச்சர்களைக் கொண்டுள்ள மாவட்டத்தின் மாகாண சபைத் தேர்தல் களம் சற்றும் மாறுபாடின்றி ஒரு பொதுத் தேர்தலுக்கான வடிவமைப்பையே காண்பிப்பதாகக் கூறப்படுகின்றது.
அரசாங்கம்- அம்பாறை மாவட்டத்தின் முன்னோடியான பின்னோடியான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கிழக்கைப் பிரித்த சாதனை போன்றவற்றினடிப்படையில் மாவட்டத்தை கைப்பற்ற முடியும் எனக் கூறினாலும் அம்மாவட்டத்தின் கால முஸ்லிம் வாக்களிப்பு முறைமை முஸ்லிம் காங்கிரஸுக்கு அல்லது அதன் இணைப்புக்குக் கிடைத்து வந்த வெற்றி வரலாற்றையே காணமுடிகின்றது. 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. வின் ரணசிங்க பிரேமதாஸவுக்கு வாக்களிக்கும் விதமான பிரகடனத்தை மேற்கொண்டது. அதன் பிரகாரம் சிறிமாவோ பண்டார நாயக்க 83,137 வாக்குகளையும் பிரேமதாஸ 96,420 வாக்குகளையும் பெற்றுக் கொண்டதன் விளைவு மாவட்டம் ஐ.தே.க. வசமானது.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரித்தது அதன் காரணமாக ஐ.தே.க. வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 59,074 வாக்குளைப் பெற்றார். பொ.ஐ.மு. வேட்பாளர் சந்திரிக்கா பண்டார நாயக்கா 168,289 வாக்குளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தைக் கைப்பற்ற முடிந்தது. 1999 ஆம் ஆண்டிலே நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மறைந்த தலைவர் அஷ்ரப்பின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் அந்தக் கட்சி ஆதரித்த சந்திரிக்கா பண்டார நாயக்க 149,593 வாக்குகளையும் மு.கா. ஆதரவு வழங்காத ரணில் 109,805 வாக்குளையுமே பெற முடிந்தது. அம்பாறை மாவட்டத்தை சந்திரிக்கா கைப்பற்றினார். சரி அதுதான் ஜனாதிபதித் தேர்தலாயினும் அடுத்து வந்த 2006 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக புதுவியூகம் ஒன்றை வகுத்தார். பொ.ஐ.முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்தார் மூன்று இடங்களைப் பெற வேண்டும் என்ற கனவு நனவானது பொ.ஐ.மு. அம்பாறை மாவட்டத்தைக் கைப்பற்றியது. நிஜமாகிய கனவை கண்ணுற முடியாது நிரதரமாகவே கண்ணயர்ந்தர் அஷ்ரஃப். பேரியல் அதாவுல்லாஹ், தொப்பி மொஹிதீன் ஆகியோர் எம்.பி.க்களாகினர்.
அதேவேளையில், 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்ட சமயம் கூட ஐ.தே.க. 58,468 வாக்குகளையும் பொ.ஐ.மு. 65,246 வாக்குகளையும் த.வி.கூ. 48,789 வாக்குகளையும் பெற மு.கா.75,257 வாக்குகளையும் மூன்று ஆசனங்களையும் பெற்று அம்பாறை மாவட்டத்தை கைப்பற்றியது. அதேவேளையில் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும் தடல்புடலாக பொதுத் தேர்தலுக்கு களமிறங்கியது 111,747 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தைக் கைப்பற்றியது. ஐ.தே.க. 42,121 வாக்குகளைப் பெற்று பின் தள்ளப்பட்டது. மு.கா. 2004 ஆம் ஆண்டில் தனித்துப் போட்டியிடாது ஐ.தே.க. வோடு இணைந்திருப்பின் அம்பாறை மாவட்டத்தை ஐ.தே.க. கைப்பற்றவும் முடிந்திருக்கும் ஆசனங்களும் அதிகரித்திருக்கும்.
அதேவேளையில், 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மு.கா. ரணிலை ஆதரித்ததால் அவர் 159,198 வாக்களையும் மு.கா. ஆதரவு பெறாத மகிந்த ராஜபக்ஷ 122,329 வாக்குகளையும் பெற்றதன் விளைவு அம்பாறை மாவட்டம் ஐ.தே.க. வசமானது. குறித்த 2005 ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போதும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவிகளில் இருந்தமையும் கிழக்கின் உதயம் இல்லாதிருந்தமையும் உண்மையே! எவ்வாறாயினும் முன்காணும் தகவல்களின் படி மு.கா.அனுசரணையுடனான பெரிய கட்சிகளின் கூட்டு ஜெயம் பெற்றிருப்பதையும் மாவட்டத்தை கைப்பற்றியிருப்பதையும் கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் காண முடிகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் ஆசனப் பகிர்வு ஐ.தே.க.வுக்கு 08 இடங்களாகவும் ஐ.ம.சு.கூ.06 இடங்கிளாகவும் அமையலாம். இல்லையேல் எட்டிலிருந்து அல்லது ஆறிலிறுந்து ஒரு ஆசனம் ஜே.வி.பி.யைச் சென்றடைய முடியும். அதேநேரம், தமிழ் மிதவாதிகளின் போட்டியிடாத் தன்மையும் தமிழ் வாக்களிப்பு விகிதாசாரமும் பெரும்பான்மையை தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்தவும் இடமுண்டு. காத்திருப்போம் 11 ஆம் திகதி அதிகாலை வரை.
1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதன்முதலாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்ததாக நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா தொகுதிகளை உள்ளடக்கியதாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்களைப் பார்க்கையில் அன்று போட்டிபோட்ட கட்சிகள் மூன்றாக இருந்திருப்பினும் போட்டியென்று அமைந்திருந்தது - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் (உககீஃஊ) ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே (குஃ?இ) மாகாண சபையை முதன்முதலாக அறிமுகப்படுத்தி தேர்தலை நடத்திய ஐ.தே.க. அக்கால போர்ச்சூழல், மக்களின் வெறுப்பு களத்தில் பணியாற்றாமை, அச்சம் போன்ற காரணங்களால் மிகச் சொற்பமான வாக்குகளை மாத்திரமே பெற்று ஆசனங்கள் எதனையும் பெறமுடியாதவாறு தகுதியீனமானது. அறுபதாயிரத்து இருநூற்றி எண்பத்தெட்டு (60,288) வாக்குகளை பதிவு செய்து கொண்டிருந்த கல்குடா தொகுதியிலிருந்து ஐ.தே.க. 194 வாக்குகளையும் உககீஃஊ 32,546 வாக்குகளையும் முஸ்லிம் காங்கிரஸ் 12,331 வாக்குகளையும் பெற்றுக் கொண்டிருந்தது.
பதிவு செய்யப்பட்ட மட்டக்களப்புத் தொகுதியின் ஒரு இலட்சத்து 536 வாக்குகளில் 476 ஐ.தே.க.வுக்கும், 46,006 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் 29,594 வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸுக்கும் வலிதான வாக்குகளாக சென்றடைந்தன. அதேவேளை, பட்டிருப்புத் தொகுதியில் பதிவாகியிருந்த 56,452 வாக்குகளில் ஐ.தே.க. 86 வாக்குகளையும், ஈ.பி.ஆர்.எல்.எப். 48,394 வாக்குகளையும் மு.கா. 175 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மூன்று தொகுதிகளிலும் அளிக்கப்பட்ட வாக்குகளின் பிரகாரம் - 26946 வாக்குகளை மொத்த வாக்குகளாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். மாவட்டத்துக்கு உரித்தான 11 ஆசனங்களில் 08 ஆசனங்களையும் 42,100 மொத்த வாக்குகள் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் 03 ஆசனங்களையும் தக்க வைத்துக் கொண்டன. அன்றைய தேர்தலில் உககீஃஊ பி.கிருபாகரன் தலைமையில் தத்தமது சொந்தப் பெயர்களில் எஸ்.கணேஷமூர்த்தி, கே.விநாயகமூர்த்தி, என்.நேசராசா, கே.குமரகுரு, ஆர்.கோப்பித்தராஜா, எஸ்.புஷ்பராஜா, எஸ்.ருத்ரா, எஸ்.பரமேஸ்வரமூர்த்தி, ஜே.லக்ஷ்மிகாந்தன், ஏ.பஞ்சலிங்கம், ஏ.இக்னேஷியஸ், எம்.எச்.றஉஸ்டீன், கே.தங்கவேல் போன்றோர் போட்டியிட்டனர். ஆனால் மு.கா.விலிருந்து உறுப்பினர்களாக வடகிழக்கு மாகாண சபைக்குள் பிரவேசித்த காலஞ்சென்ற பிரதியமைச்சர் மொஹிதீன் அப்துல் காதர், எஸ்.எல்.எம்.ஹனிபா மற்றும் ஏறாவூர் றூபி போன்றோரின் பெயர் விபரங்கள் வேட்பாளர் பட்டியலில் காணப்படவில்லை. டம்மிகளே நிறுத்தப்பட்டனர். அதன் காரணமாக சகலரும் இணைந்து கட்சிக்காகப் பணியாற்றியே 42,100 வாக்குகள் பெறப்பட்டமையும் உண்மையே!
நடைபெறவுள்ள தேர்தலுக்காக/ மட்டக்களப்பு மாவட்டம்
ஆனால், இன்று அதே 11 ஆசனங்களைப் பங்குபோடுவதற்காக முதலமைச்சர் எதிர்பார்க்கையுடன் மட்டக்களப்பு மாவட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்று கொள்கையடிப்படையில் போட்டி போட முன்வராத தமிழ் மிதவாதிகள் அன்று இணைந்த வடகிழக்காக நடத்தப்பட்ட தேர்தலில் கூட வடக்கிலோ, கிழக்கிலோ போட்டியிட முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதக் குழுவாக இருந்து பாதியளவு ஜனநாயகத்துக்குத் திரும்பிய உககீஃஊக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் போட்டி. இன்றும் அதை ஒத்த இரு அணிகளுக்கும் போட்டி. அதாவது கூ?ஙக என்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளான பாதியளவு ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள அணியினருக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் போட்டி இடம்பெறுகிறது. வித்தியாசம் என்னவெனில் இரு அணிகளும் பயணிப்பதற்கு முறையே வெற்றிலை சின்னத்துடன் கூடிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற மிகப் பெரிய பேரினவாத வாகனத்தையும், யானைச் சின்னத்துடன் கூடிய ஐ.தே.க. என்ற பேரினவாத வாகனத்தையும் தேர்ந்தெடுத்துள்ளன.
மாகாண சபைத்தேர்தலைப் பொறுத்தமட்டில் அரசாங்க வட்டாரத் தகவலின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் அதிகாரம் அரசாங்கத்தின்பால் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பதும் மற்றைய இரு மாவட்டங்களான அம்பாறை, திருமலை மாவட்டங்களில் போட்டி விறைப்பாகவும், உறைப்பாகவும் உள்ளதாக ஊகிக்கப்படுகிறதாம்.
எவ்வாறாயினும் முதலமைச்சர் பதவிக்கு வரலாற்றில் முதன்முதலாக இருவரின் பெயர்களை அதுவும் ஒரே மாவட்டத்தில் அடையாளப்படுத்தி ஒடவிட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 ஆசனங்களும் எவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஐ.தே.க.-மு.கா.கூட்டுக்குமிடையே பிரிபடப் போகின்றன என்பது ஒரு சுவாரஸ்யமாக அமையலாம். சுயேச்சையாகவும் போட்டி போடப்பட்டு அவ்வப்போது இடம்பெறுகின்ற தேர்தல்களில் பிரதிநிதிகளை வெளிக்கொணருகின்ற மட்டக்களப்பு மாவட்டம்- விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசித்திரம் காரணமாக சுயேச்சைக்குழுப் பிரதிநிதி ஒருவரை தேர்ந்தெடுக்காது எனக் கூறமுடியாது. கூ?ஙக யின் தற்போதைய வாக்குவங்கி மட்டக்களப்பு மாவட்டமே எனக்கருதப்படுவதால் அதன் இருமுனைச் செல்வாக்கின் உதவியுடன் க்கஊஅ கணிசமானளவு வாக்குகளைப் பெறமுடியுமாயின் அக்கட்சி 07 ஆசனங்களையும் ஐ.தே.க, மு.கா. கூட்டு 04 ஆசனங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
அரச கட்சிக்கான வாக்குகளின் சரிவு அக்கட்சிக்கான ஆசனங்களின் எண்ணிக்கை ஒன்றால் குறைந்து அவ்வாசனம் சுயேச்சைக்குழுவுக்கும் செல்ல முடியும். அவ்வாறாயின் அரசாங்கத்துக்கு ஆறு இடங்களும் மு.கா/ ஐ.தே.க. கூட்டுக்கு நான்கு இடங்களும் மாத்திரமே கிடைக்கவாய்ப்புண்டு.
தேசிய இனவாதத்தின் சாரல் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு இனங்களுக்கிடையே பிராந்திய இனவாதம் என்ற போர்வையில் உள்ளூர இருந்து கொண்டிருக்கும் என்பதை முடுக்கிவிடப்பட்டுள்ள முன்னெடுப்புகள் உணர்த்தாமலில்லை. எது எவ்வாறெனினும் கூறப்படுவது போன்று நீதியான தேர்தலொன்றும் வாக்கெடுப்பும் நடந்து முடிகையில் குறைந்தது 25% மான முஸ்லிம் வாக்குகள் பிளவுபடாமலிருக்க முடியாது. தமிழ் பிரதேசங்களில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் முழுமையான ஆதிக்கம் செலுத்தின் க்கஊஅ வை நோக்கிய வாக்குச்சரிவு