Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஆசிய ஊடக சுதந்திரத்தின் நிலைவரம்
[06 - May - 2008] [Font Size - A - A - A]
சமூகத்தினுடைய பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்குரிய சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மேலதிகமாக ஆசியாவின் ஊடகங்கள் வர்த்தக ரீதியான வளர்ச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் மக்களது தேவைகளுக்கான தனது பங்களிப்பை பரீட்சித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

உலக ஊடக சுதந்திர நாளான மே 03 க்கு முன்னர் இங்கு வெள்ளியன்று இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் கருப்பொருளாக இது அமைந்திருந்தது. இக்கலந்துரையாடல் ஐ.நா. பொருளாதார, சமூக, கலாசார இயக்கத்தினால் கருத்துகளை சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வெளிப்படுத்துதல் சம்பந்தமாக ஒழுங்கு செய்யப்பட்டது.

"ஊடக சுதந்திரம் பத்திரிகையாளருக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் அர்த்தமுள்ளதும், அவசியமுமாகின்றது. கருத்துகள் வெளிப்படுத்துதல் சமூகத்திற்குப் பல தகவல்களைக் கொண்டு செல்கிறது" என பாங்கொக் பணிப்பாளர் ஷெல்டன் ஷைபர் கூறியுள்ளார். "அதிகளவு தகவல்களைப் பெற்றுக்கொள்வதனால், மக்கள் தங்கள் நலன்களோடு சம்பந்தப்பட்ட விடயங்களுக்குப் பங்களிப்புச் செய்யும் வலுவைப் பெறுகிறார்கள். கலந்துரையாடல்களிலும், விவாதங்களிலும் பங்குபற்ற அவர்களுக்குக் கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் இருக்கவேண்டும் இது தொடரவேண்டும்"

அதேவேளையில், ஊடகங்கள் தமக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திர வாய்ப்பை மனிதவள அபிவிருத்திக்கான தேவைகளுக்குப் பயன்படச் செய்யவேண்டும். இதனையே தமது நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. ஆசியா கடந்த பல தசாப்தங்களாக பல பொருளாதார, மனிதவள அபிவிருத்தி வெற்றிகளை ஈட்டியுள்ளதாகப் பீற்றிக்கொள்கிறது. ஆனால் இங்கு பல சமச்சீரின்மைகளும், பொருளாதார இடைவெளிகளும் பெண்பாலாருக்கெதிரான கெடுபிடிகளும் இருக்கின்றன.

ஐ.நா.வின் அபிவிருத்தித் திட்டத்தின் ஜனநாயக ஆட்சிமுறைக் குழுவின் தலைவர்பற்றிக் கூலியர்ஸ் கூறுவதாவது; "இச்சமச்சீரின்மைக்குரிய காரணங்களுள் ஒன்று அறிவுறுத்துறையிற் காணப்படும் சீரின்மையாகும்"

இந்த அறிவு வறுமைக்கான காரணம் தகவல் பற்றாக்குறை எனலாம். இப்பற்றாக்குறை வறியவர்களை பொருளாதார, சமூக அரசியல் சம்பந்தமான தம்மைச் சார்ந்துள்ள விடயங்களில் பங்குபற்றாது தடை செய்கிறது. மேலும் எல்லாவகையான ஊழல்களுக்கும் காரணமான வெளிப்படைத் தன்மையின்மைக்கும் வழிவகுக்கிறது.

கூலியர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பல தனியார் ஊடகங்கள், இணையத் தளங்கள் இந்தப் பிராந்தியத்தில் செயலிழந்தமையைக் குறிப்பிடுகிறார்.

எனினும் அதிகளவிலான ஊடகங்கள் சமூகத்தேவைகள், சமூக மாற்றங்கள் பற்றிய தகவல்களை நிச்சயமாக வெளிப்படுத்தும் எனக் கூறமுடியாது. "அதேவேளையில், ஊடகங்கள் அனேகமாக தனியாரது நலன்களை வெளிப்படுத்துபவையாக அமைந்து பத்திரிகையாளர் உணர்ச்சி பூர்வமான செய்திகளை வெளிப்படுத்தும்போது மனச்சாட்சிக்கு மாறாக நடந்துகொள்ள வேண்டிய நிலையிலுள்ளனர்" என்றும் அவர் கூறுகிறார்.

நிர்வாகப் பணிப்பாளர், மலின்டா குயின்ரோஸ் கூறுவதாவது; "ஊடக சுதந்திரம் ஒரு தனியாள் தனது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவது பற்றியது மாத்திரமல்ல. அதனுடன் முக்கியமான கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதையும் நிச்சயப்படுத்தவேண்டும்"

"சுதந்திர ஊடகத்திற்கான சவால் தொடர்புசாதன ஊடகங்களுடனும், தொழில்நுட்பத்தினுடனும் தொடர்புகள் உண்டாகும்போது அதிகரிக்கிறது. அங்குள்ள சில பிரஜைகள் எங்களது பத்திரிகையாளர்களிலும் பார்க்க அதிகளவு தகவல்களை அறிந்துவைத்துள்ளனர்"

பல ஊடகங்களைப் பொதுமக்கள் அணுகக்கூடிய நிலையில் பத்திரிகையாளர் பல மகிழ்ச்சிதரும் வழிவகைகளை வாசிப்போரைக் கவருவதற்கு நாடவேண்டியுள்ளது என்கிறார் ஸ்ரீவன்கான், மலேசியாக் கினியின் பத்திரிகையாசிரியர்.

"தகவல் பத்திரிகையாளர் என்ற ரீதியில் எமது கடமை, தகவல்கள் சரியானவையாக இருக்க வேண்டும். வாசிப்பவர்கள் எமது தகவல்களின் ஈடுபாடுகொள்ளச் செய்வது எமது கடமை. எமது செய்திகள் வாசிப்பதற்கு உகந்தவையல்ல என எண்ணினால், நாம் எமது கடமைகளை சரிவரச் செய்யவில்லை என்பதாகும்" என்றார் அவர் யூனெஸ்கோவுடனான சம்பாஷணை ஒன்றில்.

2007 இல் அரசியலோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் 17 பத்திரிகையாளர்கள் உலகளாவிய ரீதியில் கொல்லப்பட்டனர். ஊடகத்தில் மேலதிகமான வர்த்தகமயமாக்கல் நிலையும் கவலை தரக்கூடியது என்பதும் அங்கு ஆராயப்பட்டது.

ஊடக நிறுவனங்கள் நிதியை எதிர்பார்க்கும் தேவையுள்ளது. இது அவர்களது இலக்கும், உந்துசக்தியுமாகும். இந்தநிலை பாரதூரமான பொதுப் பிரச்சினைகளைக் கையாள்வதற்குத் தடையாக உள்ளது. ஏனெனில் அது விற்பனையில் மந்த நிலையை உருவாக்கும்.

இந்த இக்கட்டான நிலையை மலேஷியாக்கினியின் கான் நன்கு உணர்ந்துள்ளார். "இது எங்களுக்கு விசனமளிக்கிறது. ஊடக நிறுவனங்களுக்கு ஒரு புதிய பொருளாதார முறையை அளிக்க விரும்புகிறோம்" அவர் விளக்குவதாவது ஊடகங்கள், விளம்பரங்களினால் பெற்றுக்கொள்ளப்படும் வருமானத்திற்குப் பதிலாக சந்தாக்களில் தங்கியிருத்தல் வேண்டும்.

"நாங்கள் வர்த்தகத்தை ஆசிய தலையங்கத்திலிருந்து பிரிக்கிறோம். எனது பிரதம நிர்வாக அதிகாரி செய்வதென்ன என்று நானறியேன். ஆனால் முன்னர் பத்திரிகையாளராக இருந்த திறமை காலியான எனது வர்த்தக பகுதியையும், தகவல் பகுதியையும் ஒரேநேரத்தில் கையாளக் கூடியவர்"

கான் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் கொள்கைகளை உடையவர் "எந்த முதலீடு செய்பவரும் எமது பத்திரிகைச் சுதந்திரத்தில் தலையீடு செய்யமாட்டார் என எம்முடன் உடன்படிக்கையொன்று செய்து கொள்ளவேண்டும்"

டேஜீச்சின் பிரகாரம் வர்த்தகமயப்படுத்தல் ஊடகத்துறையில் தலையீடு செய்வதைத் தடுக்கவல்லது கல்வியே எனக் கூறுகிறார். "நல்ல சுதந்திரமான ஊடக வளர்ச்சிக்கு கல்வியே அவசியம். ஏனெனில் படித்தவர் இன்னும் அறியவேண்டும் என்னும் ஆவலுடையவராக இருப்பார்"

"நிச்சயமாக வாழ்க்கையின் பிரகாசமான பகுதியையே மனித இயல்பு நாடுகிறது. இடையூறுகளை அதுவிரும்புவதில்லை. எல்லா வர்த்தக ரீதியான பிரச்சினைகளும் நாம் சேவைசெய்யும் மக்களிலேயே தங்கியுள்ளது. அவர்கள் சொல்வார்கள் "இனிப்போதும்" என்று.

ஆனால் றோபி அலான்பேயின் பிரகாரம் வேண்டப்படாதது, உலகியல் ரீதியானது என ஒதுக்கப்பட்டதிலிருந்தும் நல்லன பிறக்கும் என்பதாகும்.

"பரந்த அளவிலான தொடர்பு நிலையை நிராகரிக்கக் கூடாது. ஏனெனில் அது ஒரு மக்கட் கூட்டத்திற்கோ, சமூகத்திற்கோ உறுதியான மேடையை அமையக்கூடும்" அவர் பர்மியசோதிடர் ஒருவர் 2007 ஆம் ஆண்டு ஜன்ராவுக்கு நல்ல ஆண்டாக அமையும் என எதிர்வு கூறினார். அவர் அதிகார வர்க்கத்தினரால் விசாரிக்கப்பட்டார். இது பேச்சுச் சுதந்திரத்தை அடக்குவதற்கான உதாரணம் என அலம்பே குறிப்பிடுகிறார்.

அலம்பே மேலும் கூறுவதாவது; ஊடகங்களைப் பொறுத்தவரையில், எந்த விடயமும் அரசியல் ரீதியாக மாறுவது இலகுவானதாகும். மேலும் உலக ரீதியானதொன்று. அதிலும் சிறந்ததான ஒன்றுக்கு மாறுவதும் இலேசானதே.

- ஐ.பி.எஸ்.

Email this page Your Opinion Print this page
ஹாய் நலமா?
ஆசிய ஊடக சுதந்திரத்தின் நிலைவரம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் மூன்று மாவட்டங்களும்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட மன்றத்தை அவமதிக்கும் மத்திய
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com