Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ், முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
[06 - May - 2008] [Font Size - A - A - A]
* ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

தமிழ் பேசும் சமூகங்கள் எதிர்நோக்குகின்ற மாபெரும் அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடவும் அரசாங்கத்தின் காடைத்தனங்களிலிருந்து இவ்விரு சமூகங்களை பாதுகாத்துக் கொண்டும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியையும் முதலமைச்சர் ஆசனத்தையும் நாம் இந்த அரசாங்கத்திடம் இருந்து கைப்பற்றுவோம்.

இவ்வாறு ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவட்ட ஐ.தே.க. முதன்மை வேட்பாளருமான ரவூப் ஹிக்கீம் கிண்ணியாவில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.

தொடர்ந்து பேசிய ரவூப் ஹக்கீம்;

" முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்து சதிகளைச் செய்த ஹிஸ்புல்லா இறுதியாக எப்படி நயவஞ்சகத்தனமாக குத்துக் கரணமடித்தார் என்பதை நாம் இன்று இறுவட்டுகளாக (சீ.டி) வெளியிட்டுள்ளோம்.

தேர்தல் மேடைகளில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம்களுக்கு படுமோசமான அநியாயங்களைச் செய்து விட்டது என்றும் இந்த அரசாங்கத்தோடு கூட்டுச் சேரவே முடியாது என்றும் பேசியவர்கள்தான் இன்று மகிந்த ராஜபக்ஷ முதலமைச்சர் பதவியை தரப்போகின்றார் என்று அபத்தமாக பேசி வருகின்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சுப் பதவியைத் தூக்கி எறிந்தது சரியானதே என்றும் தலைவரின் பாதுகாப்புப் பறிக்கப்பட்டது என்றும் முதலைக் கண்ணீர் வடித்த ஹிஸ்புல்லா மரச்சின்னத்தைப் பறிகொடுத்து விட்டோம் என்றும் புலம்புகிறார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால்த் தான் வெல்லலாம் என்றும் மரச் சின்னத்தில் போட்டியிடுவது மடத்தனமானது என்றும் கூறிய ஹிஸ்புல்லா தான் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்குக் காரணம் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தை கைவிட்டமையே என்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்.

இத்தேர்தல் முடிந்த பிறகு ஹிஸ்புல்லாவை ஒரு வெளிநாட்டுத் தூதுவராகவாவது அனுப்புவது என்றும் அவருக்கான நெருக்கடிகளில் இருந்து அவுரை விடுவிப்பது என்றும் அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் அதற்காகத்தான் ஹிஸ்புல்லா எம்முடன் இணைந்து போட்டியிடுகின்றார் என்றும் வீரமுனையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிள்ளையான் பேசியுள்ளார் என எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி நிச்சயமாகி விட்டது என்பதால் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனைகளை இன்னும் இன்னும் தூண்டி விடுகின்ற முயற்சியையும் இன்று ஹெல உறுமய செய்யத் தொடங்கியுள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது சின்னத்தை முஸ்லிம் காங்கிரஸுக்காக விட்டுத் தந்ததை நாம் மறந்து விடக் கூடாது. கடந்த தேர்தலில் கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் யானைச் சின்னம் போட்டியிடவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியினர் மரச்சின்னத்தில் போட்டியிடும் அங்கிகாரத்தை ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கையில் வழங்கியிருந்தார்.

இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றது. நாம் மரச்சின்னத்தில் போட்டியிட முடியாது, யானைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று ஹிஸ்புல்லா சொல்லத்தக்கதாக நாம் இன்று எடுத்திருக்கின்ற முடிவை அவர் எப்படி விமர்சிக்க முடியும்.

நாம் எடுத்த இந்த முடிவு கட்சியின் சின்னத்தைப் பறி கொடுக்க எடுத்த முடிவு அல்ல இந்த இயக்கத்தைக் கட்டிக் கொடுத்த அத்தனை துரோகிகளுக்கும் பாடம் புகட்டுவதற்கு நாம் எடுத்த முடிவு என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

தார்மீக அடிப்படையிலும் பத்திரிகை ஊடக அடிப்படையிலும் அரச ஊடகங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை சொல்வதற்கு வழியேற்படுத்தித் தரவில்லை எமக்கு நேரம் ஒதுக்காமலும் அழைப்பு விடுக்காமலும் தங்கள் தரப்பு அரசியல் வாதிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆடுகின்ற அரசியல் நாடகங்களை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர்" என்றார்.

Email this page Your Opinion Print this page
கிழக்கில் சகல கட்சிகளுமே சுதந்திரமாக தேர்தல் பிரசாரம்
வடக்கு, கிழக்கு அதிகாரத்தை பசிலிடம் ஜனாதிபதி கையளிப்பு
பள்ளிக்குடாவில் கடற்படையின் முகாம் மீது தாக்குதல்; 6 பேர் பலி
அச்சத்தால் உண்மையைக் கூறமுடியாத நிலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதார் கிறிஸ்தவ மதகுரு
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயக நியமனம் தொடர்பான சர்ச்சை நீடிப்பு
ரணில் பயணம் செய்த ஹெலிகொப்டர் மகியங்கனையில் அவசரமாக தரையிறக்கம்
தீவிரசிகிச்சை பிரிவில் வேடுவர் தலைவர்
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது
திகண, அம்பாங்கோட்டையில் திடீர் தேடுதல் வெடிகுண்டு, மின் உபகரணங்கள் கண்டு பிடிப்பு
அம்பாறையில் ஜே.வி.பி. மீது தாக்குதல் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தெல்தெனிய தேடுதலில் 12 கிலோ வெடிமருந்து மீட்பு
`மோசடிகளைத் தடுக்க சுயாதீனக்குழுக்கள் அவசியம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைப்பது கண்துடைப்பு'
எகலியகொடை பள்ளியவத்தையில் குடும்பஸ்தரை காணவில்லை
ஹந்தானை மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்
மகேஸ்வரன் கொலையுடன் 1 ஆவது சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
வலி.வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக இரு வாரத்தில் ஏற்பாட்டுக் குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க ஐ.தே.கட்சி நடவடிக்கையெடுக்கும்
பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த சில ஊடகங்கள் முயற்சி
கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று உலக ஊடக சுதந்திர தின வைபவம்
தமிழகத்துக்கு 40 இலங்கை அகதிகள்
புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நித்தம்புவ பகுதியில் பெருந்தொகை பணத்தை கப்பமாகப் பெற்ற இருவர் கைது
ஆறு அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதியால் திடீர் இடமாற்றம்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் 3 வீடுகளில் ஆயுதபாணிகள் கொள்ளை
பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுக் கருத்தாடல் நிகழ்வுகள்
தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்
ஐ.தே.க.வின் முறையற்ற நிர்வாகத்தன்மையே கடந்த கால தேர்தல் தோல்விக்கு காரணம்
கிழக்கில் தற்போதுள்ள அமைதியான சூழலை யானைக்கு வாக்களித்து அழித்துவிடக்கூடாது
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபடுவதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியை காட்ட முடியும்
`தொழிலாளர்கள் உரிமையுடன் வாழுகின்ற சூழலை ஏற்படுத்துவதே இ.தொ.ஐ.மு. நோக்கம்'
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகினால் தீர்வு
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தின தீர்மானங்கள்
தமிழர்கள் அனைவரும் புலிகளல்ல என்பதை சகல பொலிஸாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்
இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சுயநல அரசியலுக்கு துணை போகிறது
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ், முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com