Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கில் தற்போதுள்ள அமைதியான சூழலை யானைக்கு வாக்களித்து அழித்துவிடக்கூடாது
[06 - May - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

மக்களுக்கென தற்போது இருக்கும் நல்ல சூழ்நிலை, நிம்மதியான வாழ்வு என்பவற்றை யானைச்சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் அழித்துக் கொள்ளக்கூடாது. சுபிட்சமான வாழ்வு தொடர்ந்தும் வேண்டுமாயின் உங்கள் தெரிவு தெளிவாக இருக்கவேண்டும், என மகாவலி விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மகாவலி "பி" வலய முகாமையாளர் ரன்ஜித் பெரேரா தலைமையில், பொலன்னறுவை, மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைக் கிராமமான ரிதிதென்னயின் விவசாயிகளுக்கென மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட வைபவத்தில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்; கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடமிருந்து பல போராட்டங்களின் மத்தியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் பயனை மக்கள் அனுபவிக்கவேண்டும். யானைச்சின்னத்திற்கு வாக்களித்தால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நன்மைகளை இழக்க நேரிடும்.

ரணிலும் ரவூப் ஹக்கீமும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நண்பர்கள். ஐ.தே.கட்சியினரின் பேச்சுக்களை நம்பி மக்கள் வாக்களித்தால், விடுதலைப் புலிகள் இப் பிரதேசத்திற்குள் வந்து இப்பிரதேச மக்களை மிகவும் கஷ்டத்திற்கு உள்ளாக்குவார்கள்.

இப்பிரதேசத்தில் ஆட்கடத்தல், படுகொலைகள், பொருள் சொத்து இழப்புக்கள், கப்பம் பெறுதல் உள்ளிட்ட இன்னும் பலவிதமான ஆபத்துக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

இதுபோன்ற மோசமான விளைவுகளை தொடர்ந்தும் நாம் சந்திப்பது நல்லதுதானா? என்பதை மக்கள் யோசித்துப்பார்க்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் நல்ல வளங்களையுடைய பிரதேசமாகும். கடந்தகாலங்களில் இப்பிரதேச மக்கள் சுதந்திரமாக நெல் உட்பட ஏனைய பயிர்களை விதைத்து அறுவடை செய்வதற்கோ, பால் உற்பத்திகளை மேற்கொள்வதற்கோ, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கோ பயங்கரவாதம் அனுமதிதரவில்லை.

ஆனால் விவசாயிகள் தற்போது தமது தொழிற்றுறைகளை தடைகள் எதுவுமின்றி மேற்கொள்வதற்கு வழிபிறந்துள்ளது.

இப்பிரதேசத்தின் வீதிகள், மதகுகள், பாலங்கள் உட்பட ஏனைய புனருத்தாபன வேலைகளையும் தென்பகுதி பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை வரவழைத்து விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்.

யானைச்சின்னத்திற்கு மக்கள் புள்ளடியிட்டால் எமது பொறியியலாளர்கள் வரமாட்டார்கள், மாறாக பிரபாகரனின் ஆட்களே இப் பிரதேசத்திற்கு வருவார்கள்.

இந்த நிலையினை இப்பிரதேச மக்கள் ஏற்படுத்திவிடாமல் நெல், தென்னை உட்பட ஏனைய பயிர் இனங்களையும் வளர்த்து, கால்நடைகளின் உற்பத்தி, மீன்பிடித் தொழில் போன்றவைகளிலும் ஈடுபட்டு முழு நாட்டிற்கும் தேவையான உணவினை வழங்குவதற்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றார்.

Email this page Your Opinion Print this page
கிழக்கில் சகல கட்சிகளுமே சுதந்திரமாக தேர்தல் பிரசாரம்
வடக்கு, கிழக்கு அதிகாரத்தை பசிலிடம் ஜனாதிபதி கையளிப்பு
பள்ளிக்குடாவில் கடற்படையின் முகாம் மீது தாக்குதல்; 6 பேர் பலி
அச்சத்தால் உண்மையைக் கூறமுடியாத நிலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதார் கிறிஸ்தவ மதகுரு
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயக நியமனம் தொடர்பான சர்ச்சை நீடிப்பு
ரணில் பயணம் செய்த ஹெலிகொப்டர் மகியங்கனையில் அவசரமாக தரையிறக்கம்
தீவிரசிகிச்சை பிரிவில் வேடுவர் தலைவர்
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது
திகண, அம்பாங்கோட்டையில் திடீர் தேடுதல் வெடிகுண்டு, மின் உபகரணங்கள் கண்டு பிடிப்பு
அம்பாறையில் ஜே.வி.பி. மீது தாக்குதல் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தெல்தெனிய தேடுதலில் 12 கிலோ வெடிமருந்து மீட்பு
`மோசடிகளைத் தடுக்க சுயாதீனக்குழுக்கள் அவசியம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைப்பது கண்துடைப்பு'
எகலியகொடை பள்ளியவத்தையில் குடும்பஸ்தரை காணவில்லை
ஹந்தானை மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்
மகேஸ்வரன் கொலையுடன் 1 ஆவது சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
வலி.வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக இரு வாரத்தில் ஏற்பாட்டுக் குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க ஐ.தே.கட்சி நடவடிக்கையெடுக்கும்
பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த சில ஊடகங்கள் முயற்சி
கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று உலக ஊடக சுதந்திர தின வைபவம்
தமிழகத்துக்கு 40 இலங்கை அகதிகள்
புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நித்தம்புவ பகுதியில் பெருந்தொகை பணத்தை கப்பமாகப் பெற்ற இருவர் கைது
ஆறு அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதியால் திடீர் இடமாற்றம்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் 3 வீடுகளில் ஆயுதபாணிகள் கொள்ளை
பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுக் கருத்தாடல் நிகழ்வுகள்
தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்
ஐ.தே.க.வின் முறையற்ற நிர்வாகத்தன்மையே கடந்த கால தேர்தல் தோல்விக்கு காரணம்
கிழக்கில் தற்போதுள்ள அமைதியான சூழலை யானைக்கு வாக்களித்து அழித்துவிடக்கூடாது
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபடுவதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியை காட்ட முடியும்
`தொழிலாளர்கள் உரிமையுடன் வாழுகின்ற சூழலை ஏற்படுத்துவதே இ.தொ.ஐ.மு. நோக்கம்'
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகினால் தீர்வு
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தின தீர்மானங்கள்
தமிழர்கள் அனைவரும் புலிகளல்ல என்பதை சகல பொலிஸாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்
இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சுயநல அரசியலுக்கு துணை போகிறது
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ், முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com