Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐ.தே.க.வின் முறையற்ற நிர்வாகத்தன்மையே கடந்த கால தேர்தல் தோல்விக்கு காரணம்
[06 - May - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் நவீன் குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடத்தின் முறையற்ற நிர்வாகத் தன்மையே கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைக் கருத்தில் கொண்டே ஐ.தே.க.வைச் சேர்ந்த 17 பேரும் அரசுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

நுவரெலியாவில் அண்மையில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் முன்னாள் சமுர்த்தி அமைச்சரும் ஐ.தே.க. அதிருப்தி குழு செயலாளருமான ஆர்.ஏ.டி. சிறிசேன உட்பட ஐ.தே.க. ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

நவீன் திஸாநாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

நான் 1999 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் பாத்தத்தும்புர தொகுதிக்கு ஐ.தே.க. அமைப்பாளராக இருந்தேன்.

எனது தந்தை காமினி திஸாநாயக்க மறைந்த பின் நுவரெலியா தொகுதிக்கு அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டில் நுவரெலியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் இங்குள்ள மக்களுக்கு தொழில் வாய்ப்போ அல்லது காணியோ எம்மால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

எமது மக்களுக்கு சேவை செய்வதற்கு அன்று பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வில்லை.

ஆனால், இன்று அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அன்று நாங்கள் இந்த கட்சியை வளர்ப்பதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்ட போதிலும் இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கே ரணில் விக்கிரமசிங்க முக்கியத்துவம் வழங்கினார். நான் ஆறுமுகம் தொண்டமானுக்கு தலைவணங்க மாட்டேன்.

அதேவேளை, இன்று எஸ்.பி. திஸாநாயக்க இந்த அரசாங்கத்துடன் இருந்திருந்தால் மிக முக்கிய அமைச்சுப் பதவி வழங்கி மக்களுக்கு சேவை செய்ய ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியிருப்பார்.

ஆனால், இன்று அவர் ஐ.தே.க.வில் இணைந்துள்ளார். அவரையும் ரணில் விக்கிரமசிங்க வளரவிட மாட்டார்.

மேலும் டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன, ரனசிங்க பிரேமதாச, காமினி திஸாநாயக்க ஆகியோர் இந்த கட்சியில் இருந்த பொழுது ஐ.தே.க. ஒரு சக்தியுள்ள கட்சியாக இருந்தது.

ஆனால், இன்று அந்த சக்தியை இழந்துள்ளது. கிழக்கு மாகாண தேர்தலின் பின் பொதுத் தேர்தல் வரும் என எதிர்க்கட்சியினர் நினைக்கின்றார்கள்.

ஆனால், பொதுத் தேர்தல் 2011 ஆம் ஆண்டுதான் நடக்கும். அதுவரை நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் எமது மக்களுக்கு சேவை செய்ய முடியாது. இதனாலேயே நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றோம் என்றும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
கிழக்கில் சகல கட்சிகளுமே சுதந்திரமாக தேர்தல் பிரசாரம்
வடக்கு, கிழக்கு அதிகாரத்தை பசிலிடம் ஜனாதிபதி கையளிப்பு
பள்ளிக்குடாவில் கடற்படையின் முகாம் மீது தாக்குதல்; 6 பேர் பலி
அச்சத்தால் உண்மையைக் கூறமுடியாத நிலை ஜனாதிபதி ஆணைக்குழு முன் அழுதார் கிறிஸ்தவ மதகுரு
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயக நியமனம் தொடர்பான சர்ச்சை நீடிப்பு
ரணில் பயணம் செய்த ஹெலிகொப்டர் மகியங்கனையில் அவசரமாக தரையிறக்கம்
தீவிரசிகிச்சை பிரிவில் வேடுவர் தலைவர்
தமிழர்களுக்கெதிரான இலங்கையின் தாக்குதல்களுக்கு இந்திய அரசு வேண்டுமென்றே துணை நிற்கிறது
திகண, அம்பாங்கோட்டையில் திடீர் தேடுதல் வெடிகுண்டு, மின் உபகரணங்கள் கண்டு பிடிப்பு
அம்பாறையில் ஜே.வி.பி. மீது தாக்குதல் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்
தெல்தெனிய தேடுதலில் 12 கிலோ வெடிமருந்து மீட்பு
`மோசடிகளைத் தடுக்க சுயாதீனக்குழுக்கள் அவசியம் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைப்பது கண்துடைப்பு'
எகலியகொடை பள்ளியவத்தையில் குடும்பஸ்தரை காணவில்லை
ஹந்தானை மலைப் பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம்
மகேஸ்வரன் கொலையுடன் 1 ஆவது சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
வலி.வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக இரு வாரத்தில் ஏற்பாட்டுக் குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கிழக்கு மக்களின் தேவைகளையும் உரிமைகளையும் பாதுகாக்க ஐ.தே.கட்சி நடவடிக்கையெடுக்கும்
பொலிஸ் திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்த சில ஊடகங்கள் முயற்சி
கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று உலக ஊடக சுதந்திர தின வைபவம்
தமிழகத்துக்கு 40 இலங்கை அகதிகள்
புலிகளின் பெயரைப் பயன்படுத்தி நித்தம்புவ பகுதியில் பெருந்தொகை பணத்தை கப்பமாகப் பெற்ற இருவர் கைது
ஆறு அமைச்சுக்களின் செயலாளர்கள் ஜனாதிபதியால் திடீர் இடமாற்றம்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் 3 வீடுகளில் ஆயுதபாணிகள் கொள்ளை
பேராசிரியர் வித்தியானந்தனின் நினைவுக் கருத்தாடல் நிகழ்வுகள்
தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும்
ஐ.தே.க.வின் முறையற்ற நிர்வாகத்தன்மையே கடந்த கால தேர்தல் தோல்விக்கு காரணம்
கிழக்கில் தற்போதுள்ள அமைதியான சூழலை யானைக்கு வாக்களித்து அழித்துவிடக்கூடாது
முஸ்லிம் சமூகம் ஒற்றுமைபடுவதன் மூலம் உலகுக்கு முன்மாதிரியை காட்ட முடியும்
`தொழிலாளர்கள் உரிமையுடன் வாழுகின்ற சூழலை ஏற்படுத்துவதே இ.தொ.ஐ.மு. நோக்கம்'
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் குளிரூட்டப்பட்ட பைபர் கிளாஸ் படகினால் தீர்வு
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தின தீர்மானங்கள்
தமிழர்கள் அனைவரும் புலிகளல்ல என்பதை சகல பொலிஸாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்
இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சுயநல அரசியலுக்கு துணை போகிறது
அரசின் காடைத்தனங்களிலிருந்து தமிழ், முஸ்லிம்களை பாதுகாக்க முதலமைச்சர் ஆசனத்தை கைப்பற்றியேயாக வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com