ஆறு அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி நேற்று திங்கட்கிழமை முதல் மாற்றியுள்ளார்.
இதன்படி நிறுவன அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளரான தேசபால ஹேவகே துறைமுக விமான சேவைகள் அமைச்சின் செயலாளராகவும் அதில் பணியாற்றிய டி.ரி.பி.ஹொல்லூரே போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், மேற்படி அமைச்சில் பணியாற்றிய டபிள்யூ.ஏ.நிஹால் சோமவீர கிராமிய கைத்தொழில்துறை சுயவேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஏ.டி.ஜோர்ஜ் மைக்கல் அந்த அமைச்சின் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, உள்நாட்டு பாதுகாப்பு பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சின் மேலதிக செயலாளரான சுனில் எஸ்.சிறிசேன வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் நகர அபிவிருத்தி புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஏச்.எம்.ரத்னசிறி நிறுவன அபிவிருத்தி முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு புறம்பாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் செயலாளரான இந்திராணி சுகததாஸ கடந்த இரண்டாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.