உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களை விழிப்பூட்டும் பிரசாரமும் ஊடக அடக்கு முறைக்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமும் இன்று செவ்வாய்க்கிழமை கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெறவுள்ளது.
காலை 6.30 மணிக்கு ஊடக அடக்கு முறைக்கெதிராக மக்களை விழிப்பூட்டி பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
மாலையில் ஊடக அடக்கு முறைக்கெதிரான கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறுவதுடன், இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஊடக அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.