பேராதனை, ஹந்தானை மலைப்பகுதியில் புதருக்குள்ளிருந்து அழுகிய நிலையில் சடலமொன்றை பொலிஸார் கடந்த சனிக்கிழமை கண்டெடுத்தனர்.
இச்சடலம் ஆணின் சடலமென்றும் இறந்தவரின் அடையாளம் குறித்து இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை எனவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சடலம் பிரதே பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள அதேவேளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.