தெல்தெனியா அம்பகோட்டை பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் நடத்திய தேடுதலில் 12 கிலோ வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேறிடமொன்றுக்கு கொண்டு செல்வதற்குத் தயாராக இரும்புப் பெட்டியொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 12 கிலோ சி.4 ரக வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது, ஏற்கனவே அம்பாறை மகாஓயா பகுதியில் பொலிஸ் வீதிச் சோதனை நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இருவர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.