* வயோதிப பெண் கைது
கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் செறிந்து வாழும் திகண, அம்பாங்கோட்டை பிரதேசத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை தெல்தெனிய பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டு வெடிகுண்டு ஒன்றினையும் மின் உபகரணங்களையும் வீடொன்றில் கண்டெடுத்துள்ளனர்.
இதேவேளை, வீட்டிலிருந்த சுமார் 60 வயதுடைய பெண்ணொருவரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
இப் பெண் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் இப் பெண்ணின் மகன் ஒருவரை மகா ஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் குறிப்பிட்ட வீட்டை சோதனைக்குட்படுத்தி வெடி குண்டையும் மற்றும் மின் உபகரணங்களையும் கண்டு பிடித்து கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை (TIME BOMB) இராசயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.