வேடுவத் தலைவர் ஊருவரியலாகே வன்னியலத்தோ திடீர் நோய் வாய்ப்பட்டு மகியங்கனை அரசினர் ஆதாரவைத்தியசாலையின் விசேட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வைரஸ் காய்ச்சலொன்றினால் கடுமையாகப் பீடிக்கப்பட்டுள்ளாரென்றும் இவரை சுகமாக்க தீவிர சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
61 வயதுடைய இவர் இது வரையில் எந்தவொரு நோயினாலும் பீடிக்கப்படவில்லையென்றும் இவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவர் முதலில் கடும் நோய் வாய்ப்பட்டு, தம்பானை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சில மணி நேரத்தில் விசேட அம்புலன்ஸ் வாகனம் மூலம் மகியங்கனை அரசினர் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.