எம்.ஏ.எம்.நிலாம்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பயணம் செய்த ஹெலிகொப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று திங்கட்கிழமை மாலை மகியங்கனையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நேற்று திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றி விட்டு மாலையில் ரணில் விக்கிரமசிங்க ஹெலி மூலம் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்தார்.
மகியங்கனை பகுதியில் வைத்து ஹெலிகொப்டரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானிகள் விடயத்தை உடனடியாக எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறிவிட்டு பாதுகாப்பாக மகியங்கனையில் தரை இறக்கியுள்ளனர்.
அதன் பின்னர் இவ்விடயம் கொழும்புக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பிறிதொரு ஹெலிகொப்டர் அங்கு அனுப்பப்பட்டு அதில் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு வந்தடைந்தார்.