ஷேவாக் கூறுகிறார்மும்மை அணிக்கெதிரான போட்டியில் துடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடாததே தோல்விக்குக் காரணமென்று டில்லி அணியின் கப்டன் விரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.
ஐ.பி.எல்.போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் துடுப்பாட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை என்று டில்லிக் கப்டன் ஷேவாக் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி 162 ஓட்டங்களுக்கு மும்பையை கட்டுப்படுத்திய போதும் துடுப்பாட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடாமல் கைவிட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். இந்தத் தோல்விக்கு ஆடுகளம் ஒரு காரணம் அல்ல என்றும் அவர் கூறினார்.
ராஜஸ்தான் முதலிடம்
நேற்றுமுன்தினம் சென்னை அணியை வீழ்த்தியதன் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
6 போட்டிகளில், 5 போட்டிகளில் வென்றதன் மூலம் 10 புள்ளிகளோடு அந்த அணி முதலிடத்தில் உள்ளது. டில்லி இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் மூன்றாவது இடத்திலும், சென்னை நான்காவது இடத்திலும் உள்ளது.
கடைசி இடத்திலிருந்து மும்பை ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி இடத்திலிருந்த மும்பை முதலிடம் வகித்த டில்லியை வீழ்த்தியது.