Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* ஜனாதிபதியின் ஆலோசகர் அஸ்வர்

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கிழக்கை மீட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஜனாதிபதி வழிசமைத்துள்ளார். இதன் மூலம் கிழக்கு வாழ் மக்கள் இழந்திருந்த தன்மானத்தை மீளப் பெற்றுள்ளனர். இணைந்த மாகாணத்தினுள் 17 சதவீதமாகக் கணிக்கப்பட்டிருந்த முஸ்லிம்கள் கிழக்கு மீட்கப்பட்ட பின்னர் அவர்களின் சனத்தொகை 41 சதவீதமாகக் கணிப்பிடப்படுகின்றது. இன்று மக்கள் கிழக்கு மாகாணமெங்கும் சுதந்திரமாக அச்சமின்றி சென்றுவரக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தேர்தலை நடாத்த முடிந்துள்ளது என ஜனாதிபதியின் ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

ஐ.ம.சு.மு. சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, காத்தான்குடி அன்வர் பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையிலேயே அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேல்மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யத் அலவி மௌலானாவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

தரிசு பற்றி வறண்டுபோயிருந்த வயல் நிலங்கள் இன்று நெல் முத்துக்களை வாரி வழங்கியுள்ளன. எல்லோருடைய வீடுகளிலும் நெல் மூடை மூடையாக அடுக்கப்பட்டுள்ளது. பாதைகளில் அச்சமின்றி சுதந்திரமாக நடமாட முடிகின்றது. 34 பௌத்த பிக்குகள் அறுத்துக் குதறப்பட்ட அரந்தலாவை ஊடாக நிம்மதியாகப் பயணம் செய்ய முடிகின்றது. பல்லாயிரம் மனித உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு சூழலில் நடைபெறுகின்ற இந்த மாகாண சபைத் தேர்தலை முஸ்லிம் உலகம் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

இன்று இந்நாட்டில் முஸ்லிம்களுக்கென தனியான மாகாண சபை ஒன்று உள்ளதென்றால் அது கிழக்கு மாகாண சபையே. இந்தத் தேர்தலின் மூலம் இந்நாட்டின் ஒரேயொரு முஸ்லிம் முதலமைச்சர் உருவாகப்போகின்றார். இதனையிட்டு அண்மையில் நம்நாட்டுக்கு விஜயம் செய்த ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அக்மத் நஜாதி மிகுந்த சந்தோஷமடைந்தார். அவரது விஜயத்தினால் 42 ஆயிரம் கோடி ரூபா நம் நாட்டுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது இதேபோன்று மத்திய கிழக்கு அரபு நாடுகளும் இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற சமாதான சூழல் காரணமாக உதவி வழங்குவதற்கு ஆர்வமாக உள்ளன.

ரவூப் ஹக்கீம் புலிகளின் தலைவரோடு ஒப்பந்தம் செய்தார். பின்னர் புலிகள் வாழைச்சேனையில் அவர் முன்பாகவே முஸ்லிம்களைக் கொன்று எரித்தனர். இவ்வாறு அவர் சென்ற இடங்களிலெல்லாம் முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்துப் பிழைப்பு நடாத்திக்கொண்டு வருகின்றார்.

ஐ.தே.க. என்ற வாகனத்தின் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை நான் அந்த வாகனத்தில் ஏறமாட்டேன் என்று சொன்ன முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் சபதத்தைத் தூசாக மிதித்துவிட்டே ரவூப் ஹக்கீம் இன்று ஐ.தே.க. வாகனத்தில் பவனி வருகின்றார். இது அந்தக் கட்சிக்கும், அதனை வளர்த்தவர்களுக்கும், அதன் தலைவருக்கும் செய்கின்ற பெரும் துரோகமாகும்.

காத்தமா நகரைக் கட்டியெழுப்பி அதன் புகழை உச்சாணிக்குக் கொண்டு சென்றவர் ஹிஸ்புல்லாஹ். அவரை நான் அன்றும் இன்றும் என்றும் விமர்சிப்பதில்லை. ஏனெனில், அவர் மண்ணைப் பொன்னாக்கும் செயல் வீரர் பாதைகள், பாடசாலைகள், மண்டபங்கள், வரவேற்பு வளைவுகள் என காத்தமா நகரின் அனைத்துத் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்து வைத்துள்ளார். மீண்டுமொருமுறை அத்தகைய மின்னல்வேக அபிவிருத்தியை இம்மண் காணவேண்டும். அதற்காகவே ஹிஸ்புல்லாஹ் இன்று மாகாண சபைக் களத்தில் குதித்துள்ளார். அவரது வெற்றியைக் காத்தான்குடி மக்கள் என்றோ ஊர்ஜிதப்படுத்திவிட்டனர் எனத் தெரிவித்தார்.

பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ காத்தான்குடி ஷ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் ரவூப் ஹாஜியார், ஜே.வி.பி. முன்னாள் அங்கத்தவரும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான எஸ். அமரசிங்க, ஏ.எஸ்.எம். ஹில்மி, சட்டத்தரணி ரூபி, அஸ்லம் குறைஷ், ஜபல் தரீக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com