Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளர் சல்மா ஹம்ஸா

நமது சமுதாயத்தின் தலைவிதியினை நிர்ணயம் செய்யும் தேர்தல் இது என்பதால் சிலரின் தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாந்துவிடாமல் நமக்கு நிம்மதியான வாழ்க்கை சூழலினை இப்பிரதேசத்தில் ஏற்படுத்தித் தந்த அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே மக்கள் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

இவ்வாறு இலங்கை ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைக்கென ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஏறாவூர் ஐயன்கேணி கிராமத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரமுகர் செய்யது இப்றாகீம் மஹ்றூப் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சல்மா ஹம்ஸா தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில் ; மாகாண சபையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து கொண்டு நாம் எதனையும் செய்ய முடியாது.

அரசாங்கத்தின் சின்னமான வெற்றிலைக்கு வாக்களிப்பதன் மூலமே மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

நம் எல்லோருக்கும் கிழக்கு மாகாணத்தில் நிம்மதியான சூழலை ஏற்படுத்தித் தந்தது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களும் எவ்வித பகைமையுணர்வுகளும் இன்றி தமது சொந்த தாயக மண்ணில் என்றென்றும் ஐக்கியமாக வாழ வேண்டும். வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் இம் மக்களின் நிம்மதி குலைவுக்கு அது வழி வகுத்துவிடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

நமது மக்களின் நிலையான இருப்பு, வாழ்விட உரிமைகள் பாதுகாப்பு, சுதந்திரம் உட்பட அனைத்துக் காரணிகளையும் முன்னிலைப்படுத்தும் தேர்தலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைந்துள்ளது.

நமது சொந்த விருப்பு வெறுப்புக்களை உதறித் தள்ளிவிட்டு மக்களின் சிறந்த வாழ்க்கைத் தர உயர்வுகளுக்காக அயராது பாடுபடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில் மக்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இதன் மூலமே நீண்டகாலமாக மக்கள் இப்பிரதேசத்தில் தொலைத்து விட்டுத் தேடும் மகிழ்ச்சி, மனநிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மீளப்பெற முடியும். சந்தர்ப்பம் உணர்ந்து மக்கள் நடந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

பெண்கள் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஜனாதிபதி மகிந்த கடுமையாக உழைத்து வருகின்றார். அவரின் நன்நோக்குள்ள பல்வேறு திட்டங்களுக்கும் நாம் உதவிக்கரம் நீட்டும் வகையில் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியடையச் செய்வோம் என்றார்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com