Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர்கள் விசனம்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எதிர்க் கட்சிகள் அரசாங்கத்திற்கெதிரான தவறான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியிருக்கும் அரசு, கிழக்கு மாகாண அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றுவது உறுதியெனவும் சூளுரைத்துள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசாங்க அமைச்சர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இங்கு அமைச்சர் நிமால் சிறிபால டீ. சில்வா கருத்துத் தெரிவிக்கையில்;

கிழக்குத் தேர்தலுக்கான வாக்களிப்பு 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்வாக்களிப்பு நடைபெறும் முன்னமே மோசடி நிகழுமென எதிர்க்கட்சிகள் ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது. இது இயற்கை விதிமுறைகளுக்குக்கூட முரணானது.

ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. முன்று எதிர்க்கட்சிகளும் இணைந்து அரசாங்கத்திற்கெதிரான தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறான பிரசாரத்திற்கு சில தனியார் ஊடகங்களும் பங்களிப்புச் செய்கின்றன.

புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் கிழக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென விரும்புகின்றனர். ஆட்சியிலிருக்கும் அரசாங்க வசம் கிழக்கு மாகாண நிர்வாகம் வருமாயின் அங்கு மேலும் அபிவிருத்தியை முன்னெடுக்கலாமென்றார்.

இங்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்துத் தெரிவிக்கையில்;

கிழக்கில் சகல கட்சிகளும் சுதந்திரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. கொழும்பிலிருந்துகொண்டு தேர்தல் சுதந்திரம் குறித்து கருதுவதில் பயனில்லை. போலியான கருத்துகளுக்கு முக்கியத்துவம் வழங்கி ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்துவது கண்டிக்கத்தக்கது.

முப்படையினரைத் தவிர கிழக்கில் எவரும் ஆயுதங்களுடன் நடமாடவில்லையென்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது. ஜனநாயகத்தை நேசிக்கும் நாம் ஜனநாயக வழிக்குத்திரும்பிய பிள்ளையான் குழுவுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுவதை எவருமே கேள்விக்குட்படுத்த முடியாதென்றார்.

இங்கு ஊடக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்துத் தெரிவிக்கையில்;

கிழக்கு புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பயனை இன்று ஐ.தே.க.யினரும் அனுபவிக்கின்றனர். அதனால்தான் அவர்கள் கிழக்குக்கு விஜயம் செய்து சுதந்திரமான தேர்தல் பிரசாரத்தில் கூட ஈடுபடமுடிகிறது.

ஐ.தே.க.ஆட்சிக்காலத்தில் இருந்தபோது எதிரணி எம்.பி.க்களினால் சுதந்திரமாக அங்கு செல்லமுடிந்ததாவென கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.

தவறான பிரசாரங்கள் மூலம் கிழக்கு அதிகாரத்தை கைப்பற்றத்துடிக்கும் ஐ.தே.க - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியை தோல்வியடையச்செய்து அபிவிருத்திமூலம் சமாதானத்தைக் காண அணிதிரளுமாறு அரசாங்கம் கிழக்கு மாகாண மக்களுக்கு அழைப்பு விடுக்கிறதென்றார்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேயவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்டனர்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com