Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* நீதி, சுதந்திர தேர்தலுக்கான மக்கள் இயக்கம்

எம்.ஏ.எம்.நிலாம்

கிழக்கு மாகாணத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (campaign for free and fair elections) நியாயமான தேர்தலுக்குரிய வாய்ப்புக் குறைவானதாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த இயக்கத்தினர் ஆயுதங்களுடன் வந்து தமிழர் வீடுகளில் அச்சுறுத்துவதாகவும் மேற்படி கண்காணிப்புக்குழு குறிப்பிட்டிருக்கின்றது. பிள்ளையான் குழுவினரின் 90 சதவீதமானோர் ஆயுதங்களுடனேயே நடமாடுவதாகவும் பொலிஸாரும், படைத்தரப்பும் இதனைக் கண்டு கொள்ளாமலிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.

தேசிய நூலகச் சேவைகள் நிலையக் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்க (இச்ஞூஞூஞு) தின் விஷேட செய்தியாளர் மாநாட்டில் அதன் நிறைவேற்றுக்குழு முதன்மை அதிகாரி சட்டத்தரணி ஷிரால் லக்திலக்கி மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நாள் முதல் படிப்படியாக வன்முறைகளும், கொலை அச்சுறுத்தல்களும் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களும் பிள்ளையான் குழுவுமே மிகமோசமாக நடந்துகொள்வதை எம்மால் நேரடியாகவே காணக்கூடியதாக இருந்தது. அங்கு மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் தினத்தன்று ஜனநாயக முறையில் தமிழ் மக்களால் வாக்களிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசியலமைப்பின் 12 ஆவது சரத்தின்படி

சட்டம் சகலருக்கும் சமமானது என்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கின்றோம். தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு குழு ஆயுதங்களுடன் நடமாட அனுமதித்தால் அது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலாகவே காணப்படும்.

கிழக்கில் இன்று வன்முறைகள் மிக மோசமாக அதிகரித்து வருகின்றன. பிள்ளையான் குழுவினரின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் முறையிடப் போனாலும் கூட பொலிஸார் முறைப்பாடுகளை ஏற்காமல் புறக்கணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வன்முறைகள் குறைவு என்பதை சர்வதேசத்துக்குக் காட்டவே அரசு முனைகின்றது.

அடுத்து வரும் நாட்கள் அச்சம் நிறைந்ததாகவே மக்கள் பார்க்கின்றனர். நியாயமான தேர்தலுக்குரிய களநிலைமை கிழக்கில் காணப்படவில்லை. இது தொடர்பிலான பூரணமான விளக்கத்தை நாம் தேர்தல் ஆணையாளரிடம் விபரித்துள்ளோம்.

ஏனைய கண்காணிப்புக் குழுக்களைப் போன்று தேர்தல் முடிவுற்றதும் அறிக்கைகளை வெளியிட்டு எமது பணியை மட்டுப்படுத்திக் கொள்ள நாம் தயாராகவில்லை. அதற்கப்பால் சில காத்திரமான பணிகளை முன்னெடுக்கவிருக்கின்றோம். மக்களின் ஜனநாயக வாக்குரிமையை பாதுகாத்துக் கொடுக்க சட்ட ரீதியிலான சில முயற்சிகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கின்றோம். நீதித்துறையின் அதிகாரத்தை மலினப்படுத்தாமல் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சில நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ளவிருக்கின்றோம்.

சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில் கூறியதவாது;

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது வாக்களிப்பு தினத்தில் எமது அமைப்பு 500 பேரை கண்காணிப்புப் பணிகளிலீடுபடுத்தவிருக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் இத் தேர்தலில் அக்கறை காட்டவில்லை. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினதும், மட்டு. மாநகர முதல்வரினதும் ஆதிக்கமே அங்கு மேலோங்கி காணப்படுகின்றது. தமிழ் மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் இருக்கும் மக்களை கட்டாயப்படுத்தி கூட்டங்களுக்கு அழைத்து வருவதாகவும் அச்சுறுத்தலுக்குப் பயந்தே அவர்கள் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் தெரிய வந்துள்ளது.

அரசும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளும் பிள்ளையானை தென்னிந்திய சினிமாப் படங்களில் வரும் கதாநாயகன் விஜய்யைப் போன்று காட்ட முனைகின்றனர்.

இத் தேர்தலில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரியவில்லை.

இச் செய்தியாளர் மாநாட்டில் கீர்த்தி தென்னகோன், அசங்கி சேனகவத்தேகெதர ஆகியோரும் கருத்துகளைத் தெரிவித்தனர்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com