Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
[07 - May - 2008] [Font Size - A - A - A]
பி.ரவிவர்மன்

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கோட்டை ரயில் நிலையம் முன்பாக விசேட அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

உலக ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று மாலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கோட்டை ரயில் நிலையம் முன்பாகவுள்ள தரையில் 'இலங்கை ஊடகவியலாளர்களுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்து' என்ற மும்மொழியிலான வாசகங்கள் அடங்கிய பதாகையொன்று வைக்கப்பட்டிருந்தது.

அதனைச் சுற்றிலும் நூற்றிற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சுற்றி நின்று இலங்கையில் உயிரிழந்த அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மெழுகுதிரி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் இலங்கையில் இதுவரை காலமும் உயிரிழந்த அனைத்து ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு அமைதியாக அஞ்சலி செலுத்தினர்.

ஊடக அடக்கு முறைக்கெதிரான இயக்கம் என்ற பொதுக்கட்டமைப்பின் கீழ் செயற்படும் ஐந்து பிரதான ஊடக அமைப்புகளே இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த அஞ்சலிக்கூட்டத்தில் சுதந்திர ஊடக அமைப்பின் தலைவர் சுனந்த தேசப்பிரியா, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் போத்தல ஜயந்த, செயலாளர் சனத் ஜெயசூரிய, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.பாரதி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை நேற்றுக்காலை ஊடக அடக்கு முறைக்கு எதிரான இயக்கம் கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஊடக சுதந்திரத்தின் அவசியம் மற்றும் அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்பது தொடர்பான துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தது.

இந்தத் துண்டுப்பிரசுரத்தில் 14 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை, 8பேர் கடத்தப்பட்டமை, 4பேர் கைதாகி தடுத்து வைக்கப்பட்டமை,5 அலைவரிசைகள் தடைசெய்யப்பட்டமை, ஒரு இணையத்தளத் தடை, 3 பத்திரிகைகள் தடைசெய்யப்பட்டமை, 3 அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை உட்பட பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com