Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
[07 - May - 2008] [Font Size - A - A - A]
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்மானிப்போமென ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை தெரிவித்ததையடுத்து பாராளுமன்றத்தில் ஏற்படவிருந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை அலுவல்கள் நடவடிக்கைகள் முடிவடைந்த பின் சிறப்புரிமை பிரச்சினையை ஐ.தே.க.எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பினார்.

பதில் செயலாளர் நாயகம் கித்துல்கொடவின் நியமனம் 14 நாட்களுக்கு மாத்திரமே எனக் கூறப்பட்டது. தற்போது அவர் 14 நாட்களுக்கும் மேல் பதவியில் நீடிக்கிறார். இது அரசியலமைப்பு சட்டவிதிகளை முற்றாக மீறும் செயலாகும்.

இதன்போது சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார குறுக்கிட்டு கித்துல்கொட பாராளுமன்ற பதில் செயலாளராக நியமிக்கும் மற்றுமொரு கடிதத்தை ஜனாதிபதி தனக்கு அனுப்பிவைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் போது மீண்டும் குறுக்கிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.அக்கடிதத்தில் மற்றுமொரு பிரதியை இச்சபையில் சபாநாயகர் சமர்ப்பிக்க வேண்டுமென்றார்.

இதற்கு விளக்கம் வழங்கிய சபாநாயகர், ஜனாதிபதி தனக்கனுப்பும் கடிதங்களை சபையில் சமர்ப்பிக்க வேண்டிய சம்பிரதாயம் இல்லை. சபாநாயகரென்ற வகையில் தாம் தெரிவிக்கும் கருத்துக்களில் சபை உறுப்பினர்கள் நம்பிக்கை கொள்வது அவசியமென்றார்.

இச்சமயம் ஐ.தே.க.மற்றும் ஜே.வி.பி.எம்.பி.க்கள் ஒரே சமயத்தில் எழுந்து கருத்துக்களை கூற முயன்றனர். இதன்போது ரணில் விக்கிரமசிங்கவும் எழுந்து நின்றார்.

இந்நிலையில் ரணிலுக்கு உரையாற்ற சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

இதன்போது ரணில் கருத்து தெரிவிக்கையில்;

பதில் செயலாளர் நாயகம் கித்துல்கொட குறித்த சர்ச்சைக்குரிய சிக்கலைத் தீர்க்க எம்முன் இரு முக்கிய தெரிவுகள் உள்ளன.

அதாவாது (ஒன்று) கித்துல்கொட தற்போது இரு பதவிகளை வகிக்கிறார். எனவே அவர் ஒரு பதவியிலிருந்து ராஜிநாமா செய்து விட்டு மற்றைய பதவியை வகிக்க வேண்டும்.

இரண்டாவது, சபையில் இது குறித்து விவாதிப்பதை தவிர்த்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அல்லது ஆலோசனைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராய்ந்து உரிய தீர்வு காணப்பட வேண்டுமென்றார்.

ரணிலின் இவ்விரு தெரிவுகளுக்கும் சபாநாயகர் பாராட்டு தெரிவித்ததுடன், இது பெரும் சர்ச்சையை தவிர்த்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து ஜே.வி.பி.யினரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே ரணிலின் ஆலோசனையினால் சர்ச்சை தவிர்க்கப்பட்டு சபை நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com