அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 59 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியும் எதிராக வாக்களித்தார்.
இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன சபையில் இருக்கவில்லை. ஐ.தே.க.வினர் சபையில் இருந்தபோதும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.