யாழ். செயலகத்தில் இயங்கிவரும் இலங்கை வங்கி வாடிக்கையாளர் சேவை நிலையம் இன்று முதல் கணினி மயமாகின்றது. கணினி மயச் செயற்பாட்டை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் ஆரம்பித்துவைப்பார்.
யாழ். மாவட்டத்தில் செயற்படும் சகல இலங்கை வங்கிக் கிளைகளும் கடந்த நான்கு மாதங்களில் கணினி மயப்படுத்தப்பட்ட நிலையில், தனது ஏழு வாடிக்கையாளர் சேவை நிலையங்களையும் கணினி மயப்படுத்தும் பணியை இலங்கை வங்கி ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் யாழ். செயலக வாடிக்கையாளர் சேவை நிலையம் கணினி மயமாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அச்சுவேலி இலங்கை வங்கி வாடிக்கையாளர் சேவை நிலையமும் கணினி மயமாகின்றது.
யாழ். செயலக இலங்கை வங்கி வாடிக்கையாளர் சேவை நிலைய கணினி மய ஆரம்ப வைபவத்தில் வடபிராந்திய இலங்கை வங்கி உதவிப் பொதுமுகாமையாளர் பி.ஜே.அருமைநாயகம், இலங்கை வங்கி செயற்பாட்டு முகாமையாளர் என்.சிவரெட்ணம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக பங்குகொள்வார்கள்.
மும்மதத் தலைவர்களின் ஆசியுரை, பிரார்த்தனைகள், கருத்துரைகளைத் தொடர்ந்து வங்கியின் நாளாந்த பணிகள் இடம்பெறும்.