மதவாச்சி மன்னார் சந்தியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மதவாச்சி சந்தி அருகே திங்கட்கிழமை இரவு 9.45 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
யாய பௌத்த விகாராதிபதி வண. ககக்டகஸ்டிகிலிய சந்திரானந்த தேரர் சென்ற ஆட்டோவே இந்தக் கிளைமோர் தாக்குதலுக்கிலக்காகியுள்ளது.
எனினும் பௌத்த பிக்குவுக்கு எதுவித உயிராபத்தும் ஏற்படாத போதும் ஆட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் படையினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.