Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* சபையில் பிரதமர் விக்கிரமநாயக்கா அறிவிப்பு

மடுத் தேவாலயத்தை இராணுவத்தினர் கைப்பற்றியதற்கு பதிலடியாக பிலியந்தலையில் பயணிகள் பஸ்ஸில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் சிங்களவர்கள் தொடர்புபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க விசாரணைகள் நடைபெற்று வருவதால் இதுகுறித்த மேலதிக விபரங்களை வெளியிட முடியாதெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது;

இந்த நாட்டிலுள்ள பயங்கரவாதிகளுக்கு பல்வேறு சக்திகள் உதவிகளை வழங்கி வருகின்றன. இவர்களுக்கு உதவும் நபர்கள் நிறுவனங்களென பலவுண்டு. இவற்றுக்கெதிராக நாம் சர்வதேச ரீதியில் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.

இந்த பயங்கரவாதிகளை அழித்தொழிப்பதென்பது தனிப்பட்ட ரீதியில் செய்யக்கூடியதல்ல. இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்புகள் தேவை. மக்களின் ஒத்துழைப்புடன் நாம் பல முனைகளில் போராடி வருகின்றோம். இவற்றில் எமக்கு பல வெற்றிகளும் கிடைத்துள்ளன.

அண்மையில் மடுமாதா தேவாலயத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவித்தோம். இப்போது அந்தத் தேவாலயத்தை படையினர் பாதுகாத்து வருகின்றனர். மடுமாதா தேவாலயத்தைப் படையினர் கைப்பற்றியதற்கு பதிலடியாகவே பிலியந்தலயில் பயணிகள் பஸ்ஸில் குண்டுத் தாக்குதல் நடத்தி அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் குண்டுத் தாக்குதலுடன் சிங்களவர்களே தொடர்புபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியவில்லை.

பிலியந்தலத் தாக்குதல் போல் பல தாக்குதல் திட்டங்கள் நடத்தப்படவிருந்தமை எமது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் எமக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கினர்.

பயங்கரவாதிகள் தம்மை காப்பாற்றிக் கொள்ளும் இறுதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே அண்மையில் மணலாறில் விமானத் தாக்குதலை நடத்தினர். கடந்த மாதம் மட்டும் முப்படையைச் சேர்ந்த 121 பேர் உயிரிழந்தும் 745 பேர் காயமடைந்துமுள்ளனர். பொதுமக்களில் 56 பேர் கொல்லப்பட்டும் 145 பேர் காயமடைந்துமுள்ளனர். இந்தக் கணக்குகளை நிறுத்துவதற்கான காலம் வந்துவிட்டது. அதற்கான நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மீட்கப்பட்டு இன்று அங்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்பகுதி மக்கள் பயங்கரவாதிகளை எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலை விரைவில் வடக்கிலும் ஏற்படும். அதற்கான நடவடிக்கைகளில் இராணுவத்தினர் இறங்கியுள்ளனர்.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com