Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
[07 - May - 2008] [Font Size - A - A - A]
* வெளிநாட்டு செய்திச்சேவை

சூறாவளியும் பெரும் புயல் காற்றும் மியன்மாரில் (பர்மா) சுமார் 15 ஆயிரம் பேரை பலியெடுத்தும் 30 ஆயிரம் மக்களை இருக்கும் இடம்தெரியாமல் காணாமற் செய்தும் கோர தாண்டவமாடியிருக்கும் நிலைமையில் அந்த நாட்டின் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் பிராந்தியத்திலும் மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உலக உணவுத் திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை செய்திருக்கிறது.

மியன்மாரின் ஐராவாடி கழிமுகப்பகுதியை சூறாவளி சின்னாபின்னமாக்கியுள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாமென அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். ஏனெனில், பின்தங்கிய பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

பொக்காலே என்ற ஒரு பட்டினப் பகுதியில் மாத்திரம் புயலால் 10 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் நியான் வின் அரச தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்திருக்கிறார். 1991 இல் பங்களாதேஷில் 1 இலட்சத்து 43 ஆயிரம் பேரை காவு கொண்ட சூறாவளி அனர்த்தத்தின் பின் ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் பாரிய இயற்கை அனர்த்தமாக மியன்மாரில் இடம்பெற்றுள்ள பேரழிவு காணப்படுகிறது.

இதேவேளை, பாங்கொக்கிலுள்ள மியன்மார் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் றப்பாடொல் பட்டாமா 30 ஆயிரம் பேர் காணாமற்போயிருப்பதாக கூறியுள்ளார்.

`நர்கீஸ்' என்ற சூறாவளியுடன் வீசிய கடும் புயற்காற்றானது மணிக்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளது.

இதேவேளை, நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்ச் செய்கை நாசமாகியுள்ளது. உப்பு நீர் வெள்ளத்தில் கலந்து வயலுக்குள் சென்றுள்ளதால் நீண்டகால அடிப்படையில் பயிர் செய்கைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளத்தாலும் புயலாலும் பல பகுதிகள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் துண்டாடப்பட்டுள்ளதால் சேத மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மியன்மாரின் அரிசி ஏற்றுமதிக்கு இடையூறு ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் தென்கிழக்காசிய நாடுகள் ஏற்றுமதித் தடைகளை விதித்துள்ளதுடன் ஏற்றுமதியிலும் குறைப்புச் செய்துள்ளன. ஆனால், இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மியன்மார் அரிசியை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்திருந்தது. ஆனால், நீண்டகால அடிப்படையில் தனது சுயதேவையை மியன்மார் பூர்த்தி செய்ய முடியுமாவெனவும் ஏற்றுமதியை தொடர முடியுமாவென்றும் கேள்வி எழுந்திருக்கிறது.

இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளால் தமது சுயதேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அரிசியை இந்த வருடம் உற்பத்தி செய்யாததால் அரிசியை இறக்குமதி செய்ய மியன்மாரை நாடியிருந்தன.

உலக உணவு விலை அதிகரிப்பால் இலங்கையிலும் அரிசியின் விலை 55 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com