Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
[07 - May - 2008] [Font Size - A - A - A]
பாகிஸ்தானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அந்நாட்டு கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் தாரிக் மஜீத்தையும் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஷ் கியானியையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் சென்றிருந்தார்.

ஜெனரல் தாரிக் மஜீத்துடனான சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா ஆராய்ந்துள்ளார்.

மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன் போது பாகிஸ்தானும் இலங்கையும் பிராந்திய சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியில் மிகச் சிறப்பான உறவு முறையையும் பரஸ்பர நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக ஜெனரல் தாரிக் மஜீத் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை இராணுவத்தின் ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான வகையில் இராணுவப் பயிற்சிகளையும் பொது அக்கறை தொடர்பான வேறு விடயங்களில் உதவிகளையும் வழங்க பாகிஸ்தான் தயாராயிருப்பதாகவும் கூறினார்.

இந்தச் சந்திப்பையடுத்து ஜெனரல் சரத் பொன்சேகா பாகிஸ்தான் இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று அந்நாட்டு இராணுவத்தளபதி ஜெனரல் பர்வேஷ் கியானியைச் சந்தித்தார்.

இதன் போது ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் படையினர் எதிர் நோக்கும் தேவைகள் குறித்து அந்நாட்டுத் தளபதிக்கும் அங்கு கூடியிருந்த சிரேஷ்ட படை அதிகாரிகளுக்கும் விளக்கமளித்தார்.

இந்தச் சந்திப்புக்கு முன்னர் இலங்கை இராணுவத் தளபதிக்கு அங்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

Email this page Your Opinion Print this page
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் இரு பொதுமக்கள் பலி; ஒருவர் காயம்
பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஜனாதிபதியால் ஜுன் 5ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது
கைதானோர், காணாமற்போனோர் விபரத்தை அறிந்துகொள்ள உடனடி தொலைபேசி சேவை
பாகிஸ்தான் படைத்தளபதிகளுடன் சரத் பொன்சேகா பேச்சு வார்த்தை
மியன்மாரில் சூறாவளி கோர தாண்டவம் 15 ஆயிரம் மக்கள் பலி; 30 ஆயிரம் பேர் மாயம் இலங்கையின் அரிசி இறக்குமதிக்கும் ஆபத்து
பிலியந்தல தாக்குதலில் சிங்களவர்களுக்கு தொடர்பு ஏப்ரலில் 177 பேர் உயிரிழப்பு ; 990 பேர் காயம்
வவுனியா துப்பாக்கிச் சூட்டில் புளொட் முக்கியஸ்தர் உயிரிழப்பு
ஹபரண படைவீரர் இடைத்தங்கல் முகாம் பாதுகாப்பு அமைச்சிடம் கையளிப்பு
திருச்சொரூபத்தை பழைய இடத்தில் வைக்க மன்னார் ஆயர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்கக்கூடாது
மட்டு. ஆசிரியர் பயிற்சி கலாசாலை மாணவரை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டம்
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று ஊவா மாகாண முன்றிலில் ஆர்ப்பாட்டம்
கிளைமோர் தாக்குதலில் பௌத்த பிக்கு மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆதரவாளர் மீதான தாக்குதலை கண்டித்து ஜே.வி.பி. அம்பாறையில் ஆர்ப்பாட்டப் பேரணி
யாழ்.செயலக இலங்கை வங்கிக் கிளை இன்று முதல் கணினி மயமாகின்றது
வடக்கு நோக்கிய யுத்தத்தைக்காட்டி பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது
அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் நியமனம் ரணிலின் தலையீட்டால் சர்ச்சை தவிர்ப்பு
தமிழ் வர்த்தகரை கடத்தி கப்பம் கோரிய வழக்கில் ஓய்வு பெற்ற விங் கொமாண்டர் உட்பட ஐவருக்கு அழைப்பாணை
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு
நீதியான தேர்தலுக்கான வாய்ப்பு கிழக்கு மாகாணத்தில் இல்லை
மு.கா. பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாள் வெட்டு; கைவிரல்கள் துண்டிப்பு
வாக்களிப்புக்கு முன்னரே முறைகேடு குறித்து ஆரூடம் கூறுவதை ஏற்கமுடியாது
திருமலையிலிருந்து வந்த கொமாண்டோ அணியினர் புலிகளிடமிருந்து மூதூர் நகரை மீட்கப்போவதாக கூறினர்
மடுதேவாலயம் ஒருபோதும் இராணுவப் பிரதேசமாக்கப்படாது
இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்
மலையக மண்ணை அபகரிக்க தீயசக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றன
ஐ.தே.கட்சிக்கு போடப்படும் ஒவ்வொரு வாக்கும் முஸ்லிம்களுக்கெதிரான நாடுகளையே பலப்படுத்தும்
ஆண்களைவிட பெண்களுக்கே அரசியல் தெரியும் யானைக்கு வாக்களித்தால் நடுவீதியில் நிற்போம்
தந்திரமான கபடப் பேச்சுக்களில் ஏமாறாது ஐ.ம.சு.முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்
கிழக்கை ஜனாதிபதி மீட்டதாலேயே மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடிந்துள்ளது
முதலமைச்சரைப் பெறுவது நோக்கமில்லையென ஹக்கீம் கூறுவதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com