பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்போர் அல்லது கடத்தப்பட்டு காணாமற்போனவர்கள் தொடர்பாக அவர்களின் குடும்பத்தவர்கள் விபரத்தைப் பெற்றுக்கொள்ள இடர் முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சு உடனடி தொலைபேசி இணைப்பு சேவையை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளால் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்களென கருதப்படுவோர் கடத்தப்பட்டும், காணாமற்போனோர் என்று கருதப்படுபவர்களின் உறவினர்கள் 0112676513 அல்லது 060 2119246 என்ற தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொள்ளமுடியுமென அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூன்றுமொழிகளிலும் இத்தொலைபேசி இலக்கங்களூடாக அழைப்பினை மேற்கொண்டு தகவலை பெற முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.