சர்வதேச ஊடக சுதந்திரத்தை முன்னிட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூர்ந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் ஊடகவியலாளர்களைக் காணலாம்.
அட்டன் நகரில் சக்தி மண்டபத்தில் புதிய ஜனநாயகக் கட்சி நடாத்திய மேதினக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல், தேசிய அமைப்பாளர் இ.தம்பையா ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் காண்கிறீர்கள்.
மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்வதை இங்கு காணலாம்.