Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஸ்பெயின் லீக் கால்பந்தாட்ட போட்டி 31 ஆவது முறை ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ்
[07 - May - 2008] [Font Size - A - A - A]
பெயின் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 31 ஆவது முறையாக `சாம்பியன்' கிண்ணத்தை கைப்பற்றியது.

ஸ்பெயின் லீக் கால்பந்து சாம்பியன் போட்டி நடந்து வருகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொண்டு ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் மோத வேண்டும்.

இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, தனது லீக் போட்டியில் ஒசசூனாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் ஒசசூனா அணி 83 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. அந்த அணி வீரர் பிரான்சிஸ்கோ இந்த கோலை அடித்தார்.

கடைசி நேரத்தில் கோல் விழுந்தாலும் கலக்கம் அடையாமல் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதன் பலனாக 87 ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் ரோபன் பதில் கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

89 ஆவது நிமிடத்தில் ரில் மாட்ரிட் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஹியான் இந்தக் கோலை அடித்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி 31 ஆவது முறையாக சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. அந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகள் இருக்கிறது. 2 ஆவது இடத்தில் உள்ள வில்லார்ரியல் அணியை விட ரியல் மாட்ரிட் அணி 10 புள்ளிகள் அதிகம் எடுத்துள்ளது. இதனால் வரும் போட்டிகளின் முடிவு எப்படியிருந்தாலும் ரியல் மாட்ரிட் சாம்பியன் கிண்ணத்தை வெல்வது உறுதியாகிவிட்டது.

நட்சத்திர வீரர்கள் டேவிட் பெக்காம் உள்ளிட்ட சிலர் அணியிலிருந்து வெளியேறினாலும் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
ஐ.பி.எல். போட்டிகளில் ஆட அக்தர் வருகை நாளை பெங்களூருக்கு எதிராக விளையாடுவார்
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மோதும் முக்கோணத் தொடர்
ஷ்ரீசாந்த், சாவ்லாவின் சிறப்பான பந்துவீச்சால் சொந்த மண்ணில் பெங்களூர் அணிதோல்வி
தன்வீரின் சிறப்பான பந்து வீச்சுக்கு கப்டன் தோனி பெரும் பாராட்டு
ஐ.பி.எல். நடன அழகிகளுக்கு எதிர்ப்பு வலுக்கிறது கலாசார சீர்கேட்டுக்கு வழி வகுக்குமெனக் கண்டனம்
ஸ்பெயின் லீக் கால்பந்தாட்ட போட்டி 31 ஆவது முறை ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com