Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மோதும் முக்கோணத் தொடர்
[07 - May - 2008] [Font Size - A - A - A]
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதும் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 8 ஆம் திகதி டாக்காவில் தொடங்குகிறது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) சார்பில் `ருவென்ரி-20' தொடர் நடக்கிறது. இதில் இந்திய வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர். இத்தொடர் முடித்தவுடன் அடுத்து நடக்கும் ஆசியக் கிண்ணத் தொடருக்கு இடையே உள்ள 20 நாட்களில் நன்றாக ஓய்வெடுக்கலாம் என்ற இந்திய வீரர்களின் ஆசை தற்போது நிறைவேறாமல் போயுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடக்கும் என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதற்கான இந்திய அணி அடுத்த மாதம் 8 ஆம் திகதி டாக்கா செல்கிறது. அன்று நடக்கும் தொடக்கப் போட்டியில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் விளையாடுகின்றன. ஜூன் 10 இல் நடக்கும் தனது முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 12 ஆம் திகதி நடக்கும் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் எதிர்கொள்கிறது. இறுதியாட்டம் 14 ஆம் திகதி நடக்கிறது. அனைத்து போட்டிகளும் பகல்- இரவு போட்டிகளாக நடக்கும்.

Email this page Your Opinion Print this page
ஐ.பி.எல். போட்டிகளில் ஆட அக்தர் வருகை நாளை பெங்களூருக்கு எதிராக விளையாடுவார்
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மோதும் முக்கோணத் தொடர்
ஷ்ரீசாந்த், சாவ்லாவின் சிறப்பான பந்துவீச்சால் சொந்த மண்ணில் பெங்களூர் அணிதோல்வி
தன்வீரின் சிறப்பான பந்து வீச்சுக்கு கப்டன் தோனி பெரும் பாராட்டு
ஐ.பி.எல். நடன அழகிகளுக்கு எதிர்ப்பு வலுக்கிறது கலாசார சீர்கேட்டுக்கு வழி வகுக்குமெனக் கண்டனம்
ஸ்பெயின் லீக் கால்பந்தாட்ட போட்டி 31 ஆவது முறை ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com