ஒரு கல்லூரியில் ஆசிரியை வகுப்பில் சிறுமிகளுக்கு போதனை நடத்திக்கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிட்டார்.
சிறுவர்களான உங்களுக்கு சில அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அவற்றினை நீங்கள் தெரிந்து வைத்திருப்பதும் நல்லது" என்றார்.
"ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் தாய் தனது மகளை அல்லது மகனைத் தண்டித்தால் அச்சிறுமியோ சிறுவனோ பொலிஸ் நிலையம் சென்று முறையிட முடியும். அப்போது பொலிஸார் உடன் நடவடிக்கை எடுப்பார்கள்" என்றும் அந்த ஆசிரியை விபரித்தார்.
ஆசிரியையின் போதனையைக் கேட்ட சிறுமி ஒருவர், வீடு திரும்பிய வேளை தாய் அவரைக் அடித்துகொண்டார். கல்லூரி சீருடையை மாற்றாமல் இங்கு வீட்டில் என்ன விளையாட்டு?" என்று கண்டித்தார்.
அப்போது சிறுமி, "நான் பொலிஸுக்குச் சென்று உங்களுக்கு எதிராக முறையிடட்டுமா?" என்று கேட்டதும் தாய் அதிர்ந்தே போய்விட்டார்.
பின்னர் சிறுமி சிரித்துக் கொண்டே ஆசிரியை தெரிவித்த தகவலைச் சொல்லி, "எங்கள் அம்மாவுக்கு எதிராக நான் எதுவும் சொல்வேனா?" என்று குறிப்பிட்டதும் இருவருமே சிரித்துக்கொண்டனர்.
நம்ம நாட்டுச் சிறுமிகள் புத்திசாலிகள்!