Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
மசகு எண்ணெயின் விலை உயர்வுக்கும் இந்தியா, சீனாவே முக்கிய காரணம்
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*அமெரிக்கா குற்றச்சாட்டு

வாஷிங்டன்: மசகு எண்ணெயின் விலை உயர்வுக்கும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளே முக்கிய காரணமென அமெரிக்கா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.

சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கு இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கமே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், முன்னதாக கருத்துத் தெரிவித்தார். இக் கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இந்த சர்ச்சை நீடித்துவரும் வேளையில் அங்கிருந்து மீண்டும் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

வெள்ளை மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளர் ஸ்காட் ஸ்டேன்சல் விடுத்துள்ள அறிக்கையில்; சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்வுக்கும், இவற்றின் தட்டுப்பாட்டுக்கும் இந்தியாவும், சீனாவுமே முக்கிய காரணம் என தாக்குதல் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த இரு நாடுகளுமே எண்ணெய்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன. இதனால், மசகு எண்ணெய் பரல் ஒன்றின் விலை தற்போது 120 டொலரை தொட்டுள்ளது என்றார்.

Email this page Your Opinion Print this page
மியன்மார் சூறாவளி அனர்த்தத்தில் 60 ஆயிரம் பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்
வட கரோலினாவில் ஒபாமா இன்டியானாவில் ஹிலாரி
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக டிமித்ரி மித்விடேவ் பதவியேற்பு
மசகு எண்ணெயின் விலை உயர்வுக்கும் இந்தியா, சீனாவே முக்கிய காரணம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com