*பிரதமராக புடின் தெரிவு
மொஸ்கோ: சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த ரஷ்யாவின் மூன்றாவது ஜனாதிபதியாக டிமித்ரி மித்விடேவ் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
கிரெம்லினில் நடைபெற்ற இப் பதவியேற்பு வைபவத்தில் சுமார் 2400 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
42 வயதான மித்விடேவ் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப் பதவியேற்பு வைபவத்தில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது அதிகாரத்தை மிட்விடேவ்விடம் கையளித்திருந்த போதும் மிக்விடேவ்டின் நிர்வாகத்தில் புட்டின் முக்கிய பிரதேசமாக விளங்குவாரென அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் புட்டினுக்கு தடை விதித்துள்ளமையைத் தொடர்ந்து மித்விடேவ்வின் வேண்டுகோளுக்கிணங்க புட்டின் பிரதமராக பதவியேற்பதற்கு உறுதியளித்துள்ளார்.
இராணுவ அணிவகுப்புடன் ஆரம்பமான பதவியேற்பு வைபவத்தில் புட்டினின் சிறிய உரையொன்றைத் தொடர்ந்து ரஷ்யாவின் அரசியலமைப்பு பிரதியின் மேல் மிட்விடேவ் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மித்விடேவ் சிறந்ததொரு ரஷ்யாவை உருவாக்க பாடுபடப் போவதாக உறுதியளித்த அதேவேளை, சிவில் மற்றும் பொருளாதார சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுமெனத் தெரிவித்தார்.
அத்துடன் சட்டத்தின் அடிப்படை விடயங்கள் செயற்படுத்தப்படுவது தொடர்பில் தான் விசேடமாக செலுத்தவுள்ளதாக தெரிவித்த மிட்விடேவ் தனிப்பட்ட ரீதியில் தனக்கு ஆதரவு வழங்கியமைக்காக புட்டினுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.