Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*எச்சரிக்கிறது ஐ.தே.க.

ரொஷான் நாகலிங்கம் மக்கள் வறுமையில் வாடுகின்ற நிலையில் தேர்தலின் பின்னர் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகருணாநாயக்க தெரிவித்ததுடன் இதற்கு அரசின் நிர்வாக சீரின்மையும் ஊழல், மோசடிகளுமே காரணமெனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.தே.க.நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

இன்று சகலரின் கவனமும் கிழக்கு நோக்கிக் திரும்பியுள்ளது. நாட்டு மக்கள் வாழ்க்கைச் செலவு உயர்வினால் வறுமையில் வாடுகின்ற நிலையில் அமைச்சர்கள் கிழக்கு மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு அங்கு குவிந்துள்ளனர்.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை உயர்வடைந்துள்ளதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு டீசலுக்கு 45 ரூபாவாலும் மண்ணெண்ணெய்க்கு ரூபா 35 விலும் நட்டமடைவதனால் எரிபொருட்களின் விலைகளை மீள பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசந்த மெல் தெரிவித்தார்.

பொருட்களின் விலையதிகரிப்புக்கு ஏற்ப சமுர்த்திக் கொடுப்பனவு மற்றும் சம்பளங்களை அரசு அதிகரிக்காத நிலையில் பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்தனால் மக்கள் வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

வங்கியொன்றில் 50 மில்லியன் ரூபா விவசாயக் கடனாக 8% வட்டியில் பெறப்பட்டுள்ளது. அதுபோல் உரம் 350 ரூபாவுக்கு வழங்கப்படுவதாக அரசு கூறுகின்ற நிலையில், உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக தெரியவில்லை. உற்பத்தி அதிகரிக்காததால் இன்று அரிசிக்கு தட்டுப்பாடும் விலையுயர்வும் ஏற்பட்டிருக்கின்றது.

கிழக்கு தேர்தல் பிரசாரத்துக்காக அரச வளங்களை அரசு பயன்படுத்துகின்றது. இவ்வாறு ஒவ்வொரு அரச நிறுவனங்களில் ஏற்பட்ட ஊழல் மோசடிகளாலேயே இன்று அதிகளவான கடனை பெறுவதனால் வட்டிக்காக பெருமளவு தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

மக்களின் எந்தப் பிரச்சினையையும் மறந்து செயற்படும் அரசு கிழக்கில் தேர்தல் கொள்ளையில் ஈடுபடுவதற்காக பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கின்றது. ஐ.தே.க.வின் தலைவர் மறைந்த டி.எஸ்.சேனநாயக்காவே கிழக்கை அபிவிருத்தி செய்ய கிழக்கின் உதயத்தைக் கொண்டு வந்தார்.

தற்போது அப்பெயர் பயன்படுத்தப்படுகின்றது. மட்டக்களப்பிலேயே அதிகளவான தேர்தல் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு அடுத்ததாக திருமலையும் அம்பாறையும் உள்ளது. இதுவரை ஐ.தே.க.வுக்கு எதிராக 51 முறைப்பாடும் ஜே.வி.பி.மற்றும் மக்கள் முன்னணிக்கு எதிராக முறையே 21,3 வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

இத்தேர்தல் நியாயமானதாக நடக்க வேண்டுமாயின் ஆயுதக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமெனக் கூறிய போதிலும் அரசு அவர்களது பாதுகாப்புக்கே பயன்படுத்துவதாகக் கூறுகின்றது.

அப்படியாயின் அங்கு வாழும் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆயுதம் வழங்கப்படவேண்டும். கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த ஆயுதங்களுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதை நிரூபிக்குமாறு கோரிய நிலையில் வாழைச்சேனை, செங்கலடி, களுவாஞ்சிக்குடி பகுதியில் இதனை அவர்கள் மேற்கொள்வதாக நாம் நிரூபித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2005 நவம்பரின் பின் இரண்டாவது முறையாக மோசடியாக இத்தேர்தலில் இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. புலிகளுடன் ஒப்பந்தம் செய்து தேர்தலில் போட்டியிடுவதாக அரசாங்கம் கூறியுள்ள நிலையில் இதனை அவர்கள் நிரூபிக்கட்டும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலேயே புலிகளுடன் ஒப்பந்தம் செய்து 150 கோடி கைமாற்றப்பட்டதாக மங்கள சமரவீர கூறிய போதிலும் இது குறித்து அரசாங்கம் மௌனம் காத்தே வருகின்றது. மக்களுக்கு முதலில் உண்மையை தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு தெரியும் எது உண்மை எது பொய் என்று? எமக்கே மக்கள் வாக்களிப்பர் என்றார்.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com