எம்.ஏ.எம்.நிலாம்
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.எம்.முஸம்மில் கிண்ணியாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது ஐ.தே.க.வில் இணைந்துகொண்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஆளும் தரப்பிலிருந்து ஒரு எம்.பி. வெளியேறினால் பட்டியலின் அடிப்படையில் அடுத்து எம்.பி.யாக வரவிருப்பவர் முஸம்மிலாவார்.
ஆனால், அவருக்கு அரசின் போக்கில் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாகவே அங்கிருந்து விலகி கிண்ணியாவில் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடப்போவதாகவும் ஐ.தே.க.வின் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் முஸம்மில் இக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்திருக்கின்றார்.