Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*ரவிகருணாநாயக்க எம்.பி.

தாங்கள் ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே பகிரங்கமாகக் கூறும் போது அரசு மட்டும் பிள்ளையானிடம் ஆயுதங்கள் இல்லையென கூறி வருகிறது. கிழக்கிலிருந்து புலிகளை விரட்டிவிட்டதாக கூறும் அரசாங்கம், ஏன் தற்போது பூனைகளுக்கு பயப்படுகிறதென ஐ.தே.க. எம்.பி.ரவிகருணாநாயக்க கேள்வியெழுப்பினார்.

பாரளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசரகால சட்ட நீடிப்புவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் கூறியதாவது;

அரசாங்கம் இந்த நாட்டை இருண்ட யுத்தத்திற்குள் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அமைச்சர்களெல்லாம் மக்களுக்காக எதையும் செய்யத்தயாராயில்லை. கூலிக்குமாரடிக்கும் வேலையையே அவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.யானைக்கும் புலிகளுக்கும் கூட்டென்ற பழையை பல்லவியை மீண்டும் தொடங்கியுள்ளனர். நாம் புலிகளுடன் கூட்டு வைத்திருந்தால் ஜனநாயக தேர்தலில் பெரு வெற்றி பெற்றிருப்போம். அரசு தான் தற்போது புலிகளாக விருந்த பூனைகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றது.

நாட்டின் பொருளாதாரத்துடன் அரசு விளையாடுகின்றது. சர்வதேசத்தினர் `பிளக்'கை கழற்ற வேண்டுமெனக் கூறியவர்கள், இன்று மின்சாரம் தாக்கி சிதறிப் போய்க்கிடக்கின்றனர். ரிமோட் ஒருவரின் கையிலும் பற்றரி இன்னொருவரின் கையிலும் இருக்கிறது.

இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டுதான் இந்த நாட்டை அரசு காப்பாற்றப் போகின்றதா? இந்த வருடம் மட்டும் 176 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை இந்த நாடு தாங்குமா?

இராணுவ இழப்புகள் தொடர்பாக அரசு உண்மைகளை மூடிமறைக்கிறது. ஆனால் புலிகளின் இழப்புகளை மட்டும் எவரும் நம்பமுடியாதளவில் கூறுகின்றனர். புலிகளை அழிப்பதற்கு பலர் கால எல்லைகளை நிர்ணயித்தார்கள். பின்னர் அதனை நீடித்தார்கள். ஆனால், எதுவுமே நடைபெறவில்லை.

சில மக்களை சில வேளைகளில் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா வேளையும் ஏமாற்ற முடியாதென்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com