*குருநாகலில் ஈழவேந்தன் தெரிவிப்பு
சிங்கள மக்கள் எங்கள் நண்பர்கள். ஆனால் இந்த நாட்டின் அரசியல் யாப்பே தமிழர்களின் முதல் எதிரியென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.
குருநாகல் இவகமுவ கிராமத்தில் அண்மையில் கல்வி வளர்ச்சி நிலையத்தில் நடைபெற்ற உலக ஒத்துழைப்பு மன்றத்தின் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த ஈழவேந்தன் மேலும் கூறியதாவது;
`சிங்களவர் சிங்களத்தில் பேசாவிடின் யார் சிங்களத்தைப்பேசுவது' என்று தன் நிலையை மறந்திருந்த சிங்கள இனத்தை பார்த்து கொழும்பில் ஆனந்தா கல்லூரியில் 1904 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி சேர் பொன். இராமநாதன் நிகழ்த்திய உரை சிங்களவர் சிந்தனையில் பெரும் திருப்பு முனையாக இருந்தது.
சேர் பொன். இராமநாதன் கூறியபடி உங்கள் மொழியை, உங்கள் பண்பாட்டை, உங்கள் நாகரீகத்தை, உங்கள் வாழ்வின் முறையை நீங்கள் பேணிக்காப்பதை நாம் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அதுபோல் இந்நாட்டின் மூத்த குடிமக்களாகிய தமிழ் மக்கள் தமது மொழியை, தமது பண்பாட்டை, தமது நாகரீகத்தை, தமது வாழ்வியல்முறையை, தமது வாழ்வகத்தை பேணிகாக்க விரும்பின் சிங்கள மக்கள் எப்படி அதற்கு தடையாகவிருக்க முடியும். தடையாகவிருப்பது தான் எமக்குப்புரிய முடியாத புதிராக இருக்கிறது.
சிங்கள மக்கள் தமது மொழி, பண்பாட்டைக் பேணி காப்பதற்கு மேலாக தமிழர் மீது, தமது வாழ்வியல் முறை அனைத்தையும் எம் மீது திணிக்க முயல்வதே இந்த நாட்டிற்கு ஏற்பட்ட பெரிய நோயாக காட்சியளிக்கிறது.
பல்லினம், பல்மொழி, பல்சமயம், பலபண்பாட்டு முறை நிலவுகின்ற இத்தீவில் ஒற்றையாட்சி முறையை எமது விருப்பத்திற்கு மாறாக திணிக்க முயல்வதே இந்நாடு பேரழிவை நோக்கி நகர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஒற்றையாட்சி முறை காலப் போக்கில் பேரினவாதத்திற்கு வழிவகுத்து எம்மை பூண்டோடு அழித்து விடும். ஆகவேதான் நாம் ஒற்றையாட்சியை முழுமையாக எதிர்க்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமைகாண வெறிப்போக்கைத் தடுத்து நிறுத்த இணைப்பாட்சியின் இனிய வாழ்வைக் காண்போம் என எங்கள் சிங்கள மக்களை அன்போடு அழைக்கிறோம்.
இணைப்பாட்சி என்பது நாட்டை துண்டாடுவது அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு உன்னத சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள்
இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
குருநாகலில் ஈழவேந்தன் தெரிவிப்பு கோட்பாடாகும். இதைத்தான் மறைந்த தந்தை செல்வா ஓயாது ஒலித்தார். இதை சிங்கள இனம், செவிகொடுக்க மறுத்ததன் விளைவுதான் அவர் மறைவதற்கு முன்பு இணைப்பாட்சிக்கு சிங்களமக்கள் இசைவு தெரிவிக்க மறுக்கும் நிலையில் நாம் பிரிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழினத்திற்கு இறுதி உயிலாக 19-11-1976 இலங்கை பாராளுமன்றத்தில் தனது இறுதி உரையை நிகழ்த்தி 1977 ஏப்ரல் 26 இல் ஏக்க உணர்வோடு எம்மை விட்டுப்பிரிந்தார்.
சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக விளங்கியபோது தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் அவரை ஜனாதிபதி மாளிகையில் நாம் சந்தித்த போது தமிழினத்தின் தனித்துவத்தை நிலைநாட்டும் முறையில் அவரின் தந்தை 1926 இல் கூறியதை நினைவுபடுத்திய நாம் இணைப்பாட்சியின் இனிய வாழ்வு காண்போம் என அம்மையாரிடம் கூறிய நாம் உங்கள் தந்தை முன்பு கூறிய நல்ல கருத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் உங்கள் தந்தை தொலைநோக்குச் சிந்தனையுடன் கூறிய கூற்றை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்களாயின் நாட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். அத்தோடு நீங்கள் வரலாற்றில் இடம்பெறுவீர்கள் என நான் கூறினேன்.
இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை அமைச்சராக இருந்த போது என்னை அடிக்கடி அழைத்து பேசுவதுண்டு. அப்போது அவருக்கு நான் கூறிய அறிவுரை ஜே.வி.பி., ஹெலஉறுமய போன்ற கட்சிகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு இணைப்பாட்சியில் ஓர் தீர்வை காணும்படி நான் வேண்டிய போது வீரவன்சவோடும், ஹெலஉறுமய தலைவரோடும் என்னைப் பேசும்படியும் மனமாற்றம் காணும் படியும் கூறினார். அந்த வேண்டுதலை ஏற்று மேற்குறித்த குழுக்களுடன் நான் பேசியபோது அவர்கள் ஒரு மொழி, ஒரு இனம், ஒரு சமயம் ஒரு நாடு இதுதான் எங்கள் முடிந்த முடிவு எனக்கூறியதை நான் ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்தபோது இவர்களிடம் நாம் மனமாற்றம் காண்பது கடினம் என ஒத்துக்கொண்டார்.
ஆனால் இதே ராஜப்க்ஷ கடல்கோல் அனர்த்தத்தின் போது பருத்தித்துறைக்கு இவர்களை அழைத்து சென்று இவர் விளக்குமாற்று வரவேற்பு பெற்றார்.
இதே ராஜபக்ஷ இனச்சிக்கல் அனைத்திற்கும் ஒற்றையாட்சியே தீர்வு எனக் கூறியுள்ளார். இணைப்பாட்சியை ஏற்க முடியாது எனக் கூறியவர் தமிழர் ஒரு தனித்தேசியம் என்பதையும் தமிழருக்கு ஒரு தாயகம் இருக்கிறது என்பதையும் ஏற்க மறுத்ததோடு தன்னுரிமை நிலைநாட்டலுக்கும் தான் மறுப்பு எனக் கூறிய அவர், எனினும் தான் பிரபாகரனுடன் பேசுவதற்கு தயார் எனக் கூறியுள்ளார். அடிப்படை உரிமையை மறுக்கின்ற உங்களுடன் பிரபாகரன் பேசுவதற்கு என்ன உண்டு என நான் கேட்டதற்கு பதில் கிடைக்கவில்லை.
எம்மை பிரித்து போகவிடுங்கள். ஆனால் உங்களிடம் மனமாற்றம் காணப்பட்டால் கூட்டு இணைப்பாட்சியில் நாம் கூடிவாழ முயல்வோம்.