Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு... News continue...
[08 - May - 2008] [Font Size - A - A - A]
சமாதானமே இன்றைய முக்கியத் தேவை. சகல இனத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும். கிழக்கிலுள்ள மக்களை ஒவ்வொரு இனமாகவும், ஒவ்வொரு குழுவாகவும் பிரிப்பதற்கு நான் இடமளிக்க மாட்டேன். மட்டக்களப்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர். இந்த பக்கம் முஸ்லிம் இந்தப் பக்கம் தமிழ் என்று எனக்கு கோடு போட்டுக் காட்ட முடியாது. அனைவரும் கலந்து வாழ்கின்றனர். அதேபோன்று ஒரு சில சிங்களக் கிராமங்களும் காணப்படுகின்றன. இவ்வாறு வாழும் சந்தர்ப்பத்தில் எவ்வாறு இதனைப் பிரிப்பது?

மட்டக்களப்பை பொறுத்தவரை முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஐக்கியப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே போன்று முஸ்லிம் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இரு பாலாரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

கிழக்கில் ஏனைய மாவட்டங்களில் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். அவர்களது உரிமைகளும் அதே போன்று பாதுகாக்கப்பட்டு சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். மக்களை இன, குல, மத ரீதியாகப் பிரிவினைபடுத்தக் கூடாது.

சுயாதீனத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படுகின்றவர்களே பேச்சுவார்த்தையின் மூலம் கிழக்கின் எதிர்காலத்தைப்பற்றி தீர்மானிக்க வேண்டும். கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் எடுக்கும் தீர்மானமே கிழக்கின் எதிர்காலத்திற்கு வித்திடும். அதற்கு சுதந்திரமான ஒரு சூழல் காணப்பட வேண்டும். இவைகளை கருத்திற் கொண்டே நாம் இத்தேர்தலில் போட்டியிடுகிறோம்.

தமிழ் மக்கள் யுத்தத்தினாலும் கடல்கோளினாலும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். அவர்களை அச்சுறுத்துவது, அவர்களது வாக்குகளை பறிப்பது கூட்டங்களுக்கு செல்வதை தடுப்பது என்பது தீய செயல்களாகும். அது ராஜபக்ஷ அரசாங்கத்தின் இனவாதக் கொள்கையையே காட்டி நிற்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கு கிடைக்காது என்று அறிந்ததன் காரணமாகவே பிள்ளையான் குழுவை வைத்து தமிழ் மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர்.

இதற்கு நாங்கள் அச்சமின்றி முகம் கொடுப்போம். அவர்கள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்படும், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் அதே போன்று முஸ்லிம் மக்களுக்கும் அநீதி இழைக்கப்படும் என்று கூறுகின்றனர். இங்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை அவர்களால் முன்வைக்க முடியாததனாலேயே இவ்வாறு கூறுகின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கையில் அரசியல் தீர்வு சம்பந்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். இது தற்போது தபாற் கந்தோரில் பல வருடங்களாக முடங்கிக் காணப்படுகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை குறைந்தபட்சம் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னராவது அந்தத் தீர்வுத்திட்டத்தை முன்வைக்குமாறு அமைச்சர் திஸ்ஸ விதாரணவை ஏன் கோர முடியாது?

தமிழ் மக்களின் ஆத்ம கௌரவத்தை உங்களால் பாதுகாக்க முடியுமா? என நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்புகிறேன்.

தமிழ் மக்களிடம் கப்பம் அறவிட்டதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கோருமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதனால்தான் நான் பிள்ளையானிடம் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வேண்டுகிறேன். நீங்கள் மனித உரிமைகளை மதிக்கின்றீர்களா. அவ்வாறாயின் நாளையே ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வாருங்கள் உங்களை அரசியலில் இணைத்துக்கொள்ள ஆயத்தமாக இருக்கின்றோம். இவர் இந்த ஆயுதத்தை பாவிப்பது தமிழ் மக்களை ஒழித்துக்கட்டுவதற்காகவே என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.

பிள்ளையான் பசில் ராஜபக்‌ஷவின் பொம்மையாகும். பசில் ராஜபக்ஷ தனக்கு தேவையான விதத்தில் அந்த பொம்மையை ஆட்டுகின்றார். இவ்வாறு இருந்துகொண்டு தன்னை முதலமைச்சராக்குமாறு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். மறு புறமாக ஹிஸ்புல்லா தன்னை முதலமைச்சராக்குமாறு முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுகின்றார். காலம் செல்லுமுன் மட்டக்களப்பு வாவிகளில் உள்ள மீன்களும் சொல்லும் தங்களை முதலமைச்சராக்குமாறு?

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பிள்ளையானிடம் எதுவித தீர்வுத் திட்டமும் இல்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். அரசாங்கம் எழுதிக் கொடுப்பதை மணித்தியாலக் கணக்கில் கூட்டங்களில் வாசிக்கிறார். இதனை விட்டு விட்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முன் வரவும்.

அரசாங்கமும் அமைச்சர் சம்பிக ரணவக்கவும் பிள்ளையானைப் பற்றி என்ன கூறுகின்றனர்? ஜாதிக ஹெல உறுமயவின் உத்தியோகபூர்வ பத்திரிகையிலும் தினமின பத்திரிகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று கருணா அம்மானிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு அவரை புறம் தள்ளியது போன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் பிள்ளையானையும் அரசாங்கம் புறம் தள்ளிவிடும் எனக் கூறுகின்றனர். இது சம்பந்தமாக ஏதாவது பதிலைக் கூறவும்.

ஒரு புறம் பிள்ளையான் கூறுகிறார் தான் முதலமைச்சராகப் போவதாக, மறு புறமாக பிள்ளையானை இரண்டு மாதத்தில் விரட்டிவிடுவோம் என்று கூறுகின்றனர். சத்துருக்கொண்டானில் இராணுவத்தினர் அகப்பட்டது போன்று பிள்ளையானும் அரசாங்கத்தினால் பிடிபடுவார். கடைசியில் பசில் ராஜபக்ஷ வந்தாறுமூலைக்குச் சென்று வெற்றிக் கரகோசமிடுவார். உங்களால் வெருகல் பிரதேசத்திற்காவது தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

எனவே எதுவித அச்சமுமின்றி உங்கள் வாக்குகளை அளியுங்கள். சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கிக் கொள்வதேயாகும்.

<< Back to first page of this news...
Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com