Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
[08 - May - 2008] [Font Size - A - A - A]
*வசந்த அலுவிஹார தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி தற்போது உறுதியாகிவிட்டது என்று ஐ.தே.க.மாத்தளை தொகுதி அமைப்பாளரும் மத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமான வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்து ஐ.தே.க.தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து விட்டு அதன் பின்னர் மாத்தளையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;

"இன்றைய அரசு கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களை வெவ்வேறாக பிரித்து அவர்களிடையே பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதை கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

அவர்கள் தொன்றுதொட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைப் போன்றே ஒற்றுமையாக வாழ விரும்புகின்றனர். ஷ்ரீ.ல.சு.க.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுமானால் தமது ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்துகொண்டுள்ள இம்மக்கள் ஐ.தே.க.வை வெற்றி பெற செய்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்பதை அவர்களுடன் உரையாடிய போது காணமுடிந்தது.

கிழக்கு மாகாண சபை தேர்தலின் நடவடிக்கைகளுக்கு ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு ஹெலி கூட வழங்க மறுத்த இன்றைய அரசு தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அனைத்து அரச வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாது அமைச்சர்கள் பலரும் அங்கு படையெடுத்து இரவோடிரவாக பல்வேறு அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைக்கின்றனர்.

ஆளும் கட்சி அமைச்சர்கள் - அரசியல் பிரமுகர்கள் அனைவருமே கிழக்கு மாகாணத்துக்கு படையெடுத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.

அரசு ஊடகங்கள் அனைத்தையுமே தேர்தல் பிரசார வேலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஷ்ரீ.ல.சு.க.மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சியினரும் ஒன்று கூடி ஐ.தே.கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசார நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். எமது கட்சியின் முதன்மை வேட்பாளரான ரவூப் ஹக்கீம், பசீர் சேகுதாவூத் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட விமர்சித்து வருகின்றனர்.

வட,கிழக்கு மாகாணம் அன்று முதல் இன்றுவரை சிறுபான்மை சமூகங்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள ஒரு மாகாணமாகும். அதனை இல்லாதொழிக்கும் முயற்சியினையே இன்றைய ஆட்சியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

இது சிறுபான்மை சமூகங்கள் இடையேயும் மோதலை உண்டு பண்ணி வரும் அதேசமயம் ஒவ்வொரு சிறுபான்மை சமூகங்கள் இடையேயும் கலவரங்களையும் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தி மற்றுமொரு இன மோதல்களை உருவாக்கும் முயற்சியில் இன்றைய ஆட்சியாளர்கள் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்தும் தமது தாயகபூமியை காப்பாற்றிக்கொள்ளவேண்டுமெனில் கட்டாயமாக இத்தேர்தலில் ஐ.தே.க.வை வெற்றி பெறக் செய்ய வேண்டும். இதனை மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.

ஐ.தே.க.வை வெற்றிபெறச் செய்வதன் மூலமே தமது தாயக பூமியை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டு அன்றுபோல் இன்றும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவ நல்லுறவுடனும் வாழ முடியும் என்பதை கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளதால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஐ.தே.க.வெற்றி இன ஒற்றுமையை எடுத்துக் காட்டும் ஒருவெற்றியாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்கப் போவதை ஆட்சியாளர்கள் எத்தகைய சதி முயற்சியை மேற்கொண்டாலும் தடுத்து நிறுத்த முடியாது" என்றார்.

Email this page Your Opinion Print this page
பாராளுமன்ற சம்பிரதாயங்களை மறந்தவராக எதிர்க்கட்சித் தலைவர்
பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைப்புக்கு விசேட பின்னணிக் காரணம் எதுவும் இல்லை
தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் முகம் கொடுக்க அஞ்சியே பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு
விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட ரணிலின் உயிர்
மியன்மார் நெருக்கடி; அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் இலங்கை பேச்சுவார்த்தை
பிள்ளையானுக்கு ஆதரவாக ஹெலியிலிருந்து துண்டுப் பிரசுரங்கள்
கறுக்காய்குளம் பகுதியில் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கி 9 படையினர் பலி
இலங்கை உட்பட 5 நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினராக தகுதியற்றவையென நிராகரிக்க வேண்டும்
சர்வாதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் கடும் முயற்சி
கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு எதிராக வாக்களிக்க சகல மக்களும் கிளர்ந்தெழ வேண்டும்
தரம் குறைந்த அரிசியை விற்போரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பணிப்பு
கட்டைக்காடு கிராமத்தில் இரு தமிழர் , ஒரு முஸ்லிம் கைது
இரத்தினபுரி வைத்தியசாலை தாதிகள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம்
கிழக்கு தேர்தல் வாக்களிப்புக்கு அரச தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடனான லீவு
இலங்கைக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்துகிறார் விஜயகாந்த்
புத்தளத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திருமலை அனுப்பப்பட்டதன் மர்மம்
விமல் வீரவன்ச அணியினரின் செய்தியாளர் மாநாட்டில் குழப்பம்
வவுனியா கிளைமோரில் பலியான 2 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன
பாணந்துறை ரயிலில் குண்டுப் புரளி
பொருளியல் துறை பேராசிரியர் இராஜரட்ணம் லண்டனில் காலமானார்
பயணியைத் தாக்கிய நடத்துநர் விளக்கமறியலில்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு வெளியே நேற்றிரவு கைக்குண்டு வெடிப்பு
தேர்தல் தினத்தில் வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு உத்தரவு
மாடியில் இருந்து யுவதி விழுந்து மரணமான சம்பவம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரி டாக்டருக்கு பிணை மறுப்பு
சிவனொளிபாதமலை உச்சியில் ஆலயத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
வவுனியாவில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க.வெற்றிபெறுவது உறுதி
தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்தும் கூட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒன்றுபடுவோம்
வெற்றி பெற்றாலும் தோல்வியை தழுவினாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வே எனது ஒரே நிலைப்பாடு
சிங்கள மக்கள் தமிழர்களின் நண்பர்கள் இந்நாட்டின் அரசியல் யாப்பே எமது எதிரி
யாழ்.மாவட்ட சபை தேர்தல் மோசடியே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தக் காரணம்
ஆயுதம் வைத்திருப்பதாக பிள்ளையானே கூறும் போது அரசு மட்டும் மறுப்பது ஏன்?
பிள்ளையான் குழுவின் ஆயுதங்களை களைந்து மக்களை பாதுகாப்பது அவசியம்
யாவுமே பௌத்தர்களின் இடமென்பதே ஹெலஉறுமய தேரர்களின் சித்தாந்தம்
3200 மில்லியன் ரூபா கடன் பளுவால் மிகின் விமான சேவை இடைநிறுத்தம்
இராணுவத்தின் பாரிய இழப்புகளுக்கு அரசியல் கலந்திருப்பதே காரணம்
ஆளும் கட்சியிலிருந்து ஐ.தே.க.வில் இணைந்தார்
பிரிட்டனுக்கான புதிய சங்கநாயக்கவிற்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி கௌரவிப்பு
சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மியன்மார் மக்களுக்கு இலங்கை அனுதாபம்
தேர்தலின் பின் பொருட்கள் விலை மேலும் மோசமாக அதிகரிக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com