வவுனியா பூந்தோட்டம் சந்திக்கு அருகிலுள்ள மதுபான நிலையத்திற்குள் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
பூந்தோட்டம் குடியிருப்பு வீதியிலேயே நேற்றிரவு 7.45 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேற்படி மதுபான நிலையத்திற்குள் நுழைந்த ஆயுதபாணிகள் அங்கிருந்த இருவர் மீது கண்டபடி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற மாவட்ட நீதிபதி விசாரணைகளை நடத்தியதுடன், கொல்லப்பட்டவரின் சடலத்தை வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வருமாறு பணித்தார்.
நேற்று முன்தினம் மாலை இந்தச் சந்தியிலேயே புளொட் முக்கியஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.