நீர்கொழும்பு வைத்தியசாலையில் மாடியில் இருந்து யுவதி ஒருவர் விழுந்து மரணமான சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டாக்டரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் உபுல் ராஜகருண உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 22 வயது யுவதியை மாடியில் இருந்து தள்ளி விழுத்தியதாக இந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் இந்திக சுதர்சன் (32 வயது) என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரான டாக்டர் தொடர்ந்தும் மூன்று மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவரைப் பிணையில் விடுவிக்க அனுமதிக்குமாறு அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு எதிரிக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு கிடையாது என்று பிணை அனுமதி விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார்.
அதனைத் தொடர்ந்து அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.