கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கென 15 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு தேர்தல் சாவடியிலும் 5 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நாளன்று அரச வாகனங்கள் இலக்கத்தகடு அற்ற வாகனங்கள் தேர்தல் தொகுதிகளில் நடமாடினால் அவற்றைக் கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காமினி நவரத்ன கூறியுள்ளார்.