ஊனமுற்ற பயணி ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திய பஸ்ஸின் நடத்துநர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் இருந்து கொகிலவத்தைக்குச் சென்று கொண்டிருந்த இந்த பஸ்ஸில் ஊனமுற்ற பயணி ஒருவரும் பயணம் செய்தார்.
தான் இறங்கும் இடம் வந்ததும் அவர் பஸ்ஸை நிறுத்த மணியை அடிக்குமாறு நடத்துநரிடம் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த பஸ் நடத்துநர் ஏனைய பயணிகள் முன்னிலையில் ஊனமுற்ற அப்பயணியை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக அந்தப்பயணி முகத்திலும், தலையிலும் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸார் சந்தேகநபரை கொழும்பு மேலதிக நீதிவான் செல்வி சுஜாதா அழகப்பெரும முன்னிலையில் ஆஜர் செய்தபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.