பாணந்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயிலில் பயணிகள் பெட்டியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பயணப் பையினால் பெரும் பரபரப்பும் பதற்றமும் இடம் பெற்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்றது.
சிலாபத்தில் இருந்து வந்த இந்த ரயிலின் பயணி ஒருவர் இதனைக் கண்டு அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இதனையடுத்து பொலிஸாரும் இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவினரும் ஸ்தலத்துக்கு வந்தனர். இவர்கள் அந்த பயணப்பையை பரிசோதித்த போது உள்ளே பழைய உடுபுடவைகள் காணப்பட்டன. இதனால் சில மணி நேரம் கரையோர ரயில் சேவைகள் தடைப்பட்டன.