வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட இருவரது சடலங்களும் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செவ்வாய் மாலை இராணுவ ட்ரக் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலிலேயே இவ்விருவரும் கொல்லப்பட்டனர்.
இவ்விருவரது சடலங்களும் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்றுக் காலை இருவரது உறவினர்களும் சடலங்களை அடையாளங்காட்டினர். செல்லத்துரை சுந்தரலிங்கம் (66 வயது) பார்க் வீதி, வவுனியா சின்னத்துரை ஜெயக்குமார் (37 வயது) திருநாவல்குளம் ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர்.
பிரேத பரிசோதனையின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.