இம்மாதம் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனியார் மற்றும் அரசாங்க திணைக்கள ஊழியர்களுக்கு தங்கள் வாக்குகளை அளிப்பதற்கு சம்பளத்துடன் கூடிய லீவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் ஒருவர் தான் தொழில்புரியும் இடத்தில் இருந்து வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று திரும்பும் வரையிலும் அந்தத் தூரத்தைக் கருத்திற் கொண்டு 4 மணித்தியாலங்களுக்குக் குறையாத லீவு வழங்கப்பட வேண்டும்.
தனியார் மற்றும் அரச சேவையிலுள்ள ஊழியர்களுக்கும் தற்காலிக மற்றும் நிரந்தர சேவையிலுள்ள ஊழியர்களுக்கும் இந்த லீவு ஏற்புடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது இந்த விடுமுறையைப் பெறுவதில் பல சிரமங்களை ஊழியர்கள் எதிர்நோக்கியதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.